Anuya Interview: ‘அந்த மார்ஃபிங் போட்டோ வெளியான போது அப்படியே.. என்னோட குடும்பம்தான்! - ஆபாசபடம் குறித்து அனுயா விளக்கம்
உண்மையில் மார்ஃபிங் என்பது மிகுந்த மன உளைச்சலை கொடுக்கும். காரணம் என்னவென்றால், நானே அதனை கடந்து வந்திருக்கிறேன்.
‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை அனுயா. தொடர்ந்து பல படங்களில் நடித்த இவரின் ஆபாச படங்களை சுசித்ரா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், அந்த விவகாரம் குறித்து அவள் கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “நம்முடைய சமூகத்தில் பெண்கள் எதை செய்தாலும் குற்றம் சொல்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேலே, நான் இந்த நொடியில் வாழ ஆசைப்பட்டேன். அதனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதை நிறுத்திக் கொண்டேன்.
உண்மையில் மார்ஃபிங் என்பது மிகுந்த மன உளைச்சலை கொடுக்கும். காரணம் என்னவென்றால், நானே அதனை கடந்து வந்திருக்கிறேன். சிலர் சாதாரணமாக பெண்களை புகைப்படம் எடுக்கிறார்கள். பார்த்தால் அதை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டு விடுகிறார்கள்.இதனால் பெண்கள் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள்.
அந்த வகையில் என்னுடைய மார்ஃபிங் போட்டோ வெளியான பொழுது என்னுடைய குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக நின்றனர். அதனால் என்னால் அதிலிருந்து வெளியே வர முடிந்தது காரணம், அவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்.
இன்று இன்டர்நெட்டில் மிக எளிமையாக ஒரு பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்ய முடிகிறது. இன்னொரு விஷயம் அது மார்ஃபிங் தான் என்று நம்மால் மறுத்து கூட பேச முடியவில்லை. அந்த நிலைமை தான் இருக்கிறது. உண்மையில் சிலர் இதனை தொழிலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்
இது மட்டுமல்ல ஒரு பெண் கல்யாணம் முடிந்து கணவன் வீட்டுக்கு சென்று விட்டால், கணவனோ உங்களது அம்மா வீடு தான் உனக்கு வீடு என்று சொல்கிறார். ஆனால் இந்த பக்கம் தாயோ, உன் கணவன் வீடு தான் உன்னுடைய வீடு என்று சொல்கிறார். அப்படியானால் உண்மையில் ஒரு பெண்ணுக்கு எதுதான் வீடு?” என்று பேசினார்.
டாபிக்ஸ்