தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anurag Kashyap: ‘எல்லாரும் பயப்பட்றாங்க.. என்னாலலெல்லாம் அவர் கூட வேலை பார்க்க முடியாது’ - அனுராக் காஷ்யப்

Anurag Kashyap: ‘எல்லாரும் பயப்பட்றாங்க.. என்னாலலெல்லாம் அவர் கூட வேலை பார்க்க முடியாது’ - அனுராக் காஷ்யப்

Kalyani Pandiyan S HT Tamil
Jun 05, 2024 03:56 PM IST

Anurag Kashyap: நமது நாடு ஹீரோக்களை வழிபடும் நாடாக இருக்கிறது. நாம் பல விஷயங்களை இழந்து, சுயமரியாதை மற்றும் நம்பிக்கைத்தன்மையில் மிகவும் குறைவாக இருக்கிறோம். நமக்கு ஹீரோக்கள் தேவை. - அனுராக் காஷ்யப்

 Anurag Kashyap: ‘எல்லாரும் பயப்பட்றாங்க.. என்னாலலெல்லாம் அவர் கூட வேலை பார்க்க முடியாது’ - அனுராக் காஷ்யப்
Anurag Kashyap: ‘எல்லாரும் பயப்பட்றாங்க.. என்னாலலெல்லாம் அவர் கூட வேலை பார்க்க முடியாது’ - அனுராக் காஷ்யப்

ட்ரெண்டிங் செய்திகள்

ஷாருக்கானை வைத்து படம் எடுப்பீர்களா? 

இது குறித்து ஹ்யூமன்ஸ் ஆஃப் சினிமா யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “ நமது நாடு ஹீரோக்களை வழிபடும் நாடாக இருக்கிறது. நாம் பல விஷயங்களை இழந்து, சுயமரியாதை மற்றும் நம்பிக்கைத்தன்மையில் மிகவும் குறைவாக இருக்கிறோம். நமக்கு ஹீரோக்கள் தேவை. 

நமது திரைப்படங்களில் ஏன் கற்பனைக்கு மிஞ்சிய ஹீரோக்கள் இருக்கிறார்கள். திரைப்படங்களில் சூப்பர் ஹீரோக்களாக நடிக்கும் போது, தங்களது முகத்தை மறைக்காத நடிகர்கள், நம் நாட்டில்தான் இருக்கிறார்கள். அவர்களது முகமூடிகள் மிகவும் சிறியதாக இருக்கும். ஏனென்றால் அவர்கள், அவர்களின் முகங்களைக் காண்பிப்பது இங்கு முக்கியம்." என்றார். 

புதிய விஷயங்களை ஏன் செய்ய பயப்படுகிறார்கள்

மேலும் ஷாருக்கானை பற்றி பேசிய அவர், சோசியல் மீடியா இப்படி இருக்கும் காலக்கட்டத்தில், பெரிய நடிகர்கள் வைத்திருக்கும் ரசிகர் பட்டாளத்தை பார்க்கும் போது எனக்கு பயமாக இருக்கிறது. பெரிய நடிகர்கள் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் மீண்டும் மீண்டும் நடிப்பதற்கு அவர்களது ரசிகர்களே காரணம். அவர்கள் தனக்கு பிடித்த நடிகரிடம் இருந்து, அவர் திரையில் முன்னால் செய்து, தாங்கள் கொண்டாடியதை மீண்டும் மீண்டும் எதிர்பார்க்கிறார்கள். 

அது நடக்கவில்லை என்றால், ரசிகர்கள் அதை நிராகரிக்கிறார்கள். எனவே நடிகர்கள் கூட புதிய விஷயங்களை முயற்சிக்க பயப்படுகிறார்கள். ஆகையால் ஷாருக்கானின் ஆராவிற்கு வேலை செய்யும் திறன் எனக்கில்லை என்று நினைக்கிறேன். ஒரு வேளை அவர் நடித்த ஃபேன் திரைப்படம் வொர்க் அவுட் ஆகி இருந்தால், அவருடன் வேலை பார்க்கும் தைரியம் எனக்கிருக்கிறது என்று சொல்லி இருக்கலாம்.” என்று பேசினார்

முன்னதாக, அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் , “ நான் புதியவர்களுக்கு உதவ முயற்சித்து நிறைய நேரத்தை வீணடித்தேன். எனவே இப்போது நான் படைப்பு மேதைகள் என்று நினைக்கும் சீரற்ற நபர்களை சந்திப்பதில் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதனால் தற்போது பணம் வாங்கி விட்டு சந்திக்கலாம் என்று யோசித்து இருக்கிறேன். என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அதில், "யாராவது என்னை 10 முதல் 15 நிமிடங்கள் சந்திக்க விரும்பினால்,  1 லட்சம், அரை மணி நேரத்திற்கு 2 லட்சம் மற்றும் 1 மணி நேரத்திற்கு 5 லட்சம் வரை வசூலிப்பேன். அது தான் விகிதம். மக்களைச் சந்தித்து நேரத்தை வீணடித்து நான் சோர்வடைந்து விட்டேன். நீங்கள் உண்மையிலேயே அதை கொடுக்க முடியும் என்று நினைத்தால், என்னை அழைக்கவும் அல்லது தயவு செய்து விலகி இருங்கள்.  முன் கூட்டியே பணம் செலுத்தப்பட்ட பிறகு தான் இனி சந்திப்பு “ எனக் குறிப்பிட்டு இருந்தார். 

தொடர்ந்து எழுதியிருந்த அவர்  " நான் அதை தான் சொல்கிறேன். குறுஞ்செய்தி அல்லது டிஎம் அல்லது என்னை அழைக்க வேண்டாம். பணம் கொடுங்கள், உங்களுக்கு நேரம் கிடைக்கும். நான் ஒரு தொண்டு செய்ய இங்கு வரவில்லை. குறுக்குவழிகளைத் தேடும் மக்களால் நான் சோர்வடைகிறேன்.” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி இருந்தது கவனிக்கத்தக்கது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்