‘என் மனைவி இடத்தில் மற்றவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள்’ அன்னபூரணியின் 3வது கணவர் ரோஹித் திடீர் அறிக்கை!
தான் யார், தான் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து தன்னை இயக்கும் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு இயங்கும் ஒருவரால் மட்டுமே இப்படி கடுமையான பாதையில் பயணிக்க முடியும். அதனால் இங்கு என் மனைவியை பற்றி பேச யாருக்கும் அருகதை கிடையாது.

அன்னபூரணி அரசு ரோஹித் அம்மாவின் கணவரும், முன்னாள் சேவகருமான ரோஹித், அன்னபூரணியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு இடுகையை வெளியிட்டுள்ளார். அதில் தன் மனைவி மீதான விமர்சனங்களுக்கு தனது விளக்கத்தை அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் என் மனைவி போல வாழ முடியுமா?
‘‘என் மனைவியை பற்றி பேசுவதற்கு இங்கு யாருக்கும் தகுதி கிடையாது. தானும் சத்தியத்தின் பாதையில் சென்று கொண்டு அவர்களின் பக்தர்களையும் சத்தியத்தின் பாதையில் அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறார். சத்தியத்தின் பாதையில் பயணிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அந்த பாதையில் சென்று சத்தியத்தை நிலை நாட்டுவதற்கு என் மனைவி கடந்து செல்லும் சூழ்நிலைகளையும் சோதனைகளையும் ஒரே ஒரு நாள் என் மனைவியை பற்றி அவதூறு பேசுபவர்களுக்கு கொடுத்தால் அதை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்வார்கள்.
தான் யார், தான் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து தன்னை இயக்கும் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு இயங்கும் ஒருவரால் மட்டுமே இப்படி கடுமையான பாதையில் பயணிக்க முடியும். அதனால் இங்கு என் மனைவியை பற்றி பேச யாருக்கும் அருகதை கிடையாது,’’ என்று அந்த பேஸ்புக் பதிவில் ரோஹித் பதிவு செய்துள்ளார்.
பிப்ரவரி மாதம் அன்னபூரணி வெளியிட்ட வீடியோ
கடந்த பிப்ரவரி மாதம் அன்னபூரணி அரசு ரோஹித் அம்மா, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தனக்கு எதிராக சூழ்ச்சி நடைபெறுவதாக கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தான், அவரின் மூன்றாவது கணவரான ரோஹித்தின் இந்த பதிவையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அப்போது அன்னபூரணி என்ன பேசியிருந்தார் என்பதை பார்க்கலாம்.
அன்னபூரணி அரசு அம்மா பேசும் வீடியோவில், "நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நல்ல சக்தி வரும் போது, அதை எதிர்ப்பதற்காக கூடவே தீய சக்தியும் வரும். இறுதியில் நல்ல சக்தி தான் வெற்றி பெறும். அதே மாதிரி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீயசக்திகளாக இருக்கக்கூடிய சில மனிதர்கள் என்னை நேரடியாக எதிர்த்து அழிக்கப்பார்த்தார்கள், அது முடியவில்லை. திரும்பவும் அந்த தீயசக்திகளாக இருக்கக்கூடிய சிலர் என்னை சூழ்ச்சி செய்து கையில் எடுத்திருக்கிறார்கள்.
எனக்கு எதிராக பரப்பப்படும் கருத்துக்கள்
சமூக ஊடகங்களோ அல்லது ஊடகங்களில் நான் பேட்டி கொடுத்தால் கூட நிறைய எதிர்மறை கமெண்ட்கள்தான் இருக்கும். அந்த தீயசக்திகள் தான் ஒரு ஐடி விங்க் வைத்து என்னை அழிக்க செயல்படுகிறார்கள். என்னுடைய பக்தர்கள் பெற்ற ஆன்மீக அனுபவத்தை பகிர்ந்து கொண்டால் கூட அந்த கமெண்ட்கள் எல்லாம் அழிக்கப்பட்டு இருக்கும். அந்த ஐடி விங்தான் என்னை ட்ரோல் பண்ணுகிறார்கள். என்னை கேலி, கிண்டல் செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் மீடியாக்களில் எனக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்.
என் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி சிறைக்கு அனுப்ப சூழ்ச்சி நடக்கிறது. ஆனால், என்னுடைய உண்மைத் தன்மையும், என்னுடைய சக்தியும் இந்த நிமிடம் வரை என்ன காத்துகிட்டு இருக்கிறது. என்ன சூழ்ச்சி செய்தாலும் என்னுடைய உண்மைத் தன்மையும், சக்தியும் என்னை பாதுகாத்து, சத்தியத்தை வெற்றி பெறச்செய்யும். அப்போது அந்த தீய சக்திகளாக இருக்கக்கூடிய அந்த அதர்மம் வீழ்ச்சி அடையும். அப்போது அந்த தீயசக்திகளாக இருந்தவர்கள் யாரென்று மக்களே தெரிந்துகொள்வார்கள்,’’ என்று பிப்ரவரியில் வெளியிட்ட வீடியோவில் அன்னபூரணி பேசியிருந்தார்.
