500 கோடி சொத்து.. ஹனிமூன் ட்ரிப்பா? என் கூட குடும்பம் நடத்த முடியாது.. மனம் திறக்கும் அன்னபூரணி
அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வரும் அன்னபூரணி தன் வாழ்க்கை குறித்து மனம் திறந்து வெளிப்படையாக பேசுகிறார்.
அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வரும் அன்னபூரணி தன் வாழ்க்கை குறித்து மனம் திறந்து வெளிப்படையாக பேசுகிறார்.
இதுதொடர்பாக அவர் சன் நியூஸ் சேனலுக்கு அவரது புதிய கணவர் ரோஹித்துடன் சேர்ந்து பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், " மக்களுக்கு அருள் வாக்கு கூறி வந்த நான் என் கணவரே திரும்ப வந்தபிறகு எப்படி கல்யாணம் செய்யாமல் இருப்பேன்.
இது ரோஹித் இல்லை அரசு
இது ரோஹித் இல்ல என் கணவர் அரசு தான். நானே என் போஸ்டுகளில் எல்லாம் சொல்லி இருக்கேன் இது அரசுவின் பரிணாமம்ன்னு. அரசுவோட உடலுக்குத் தான் இறப்பு. உயிர் தன்மைக்கு இறப்பு இல்ல. அவரு எனக்குள்ள சூட்சமமா இருந்து என்ன பாதுகாத்து வழிநடத்திட்டு இருந்தாங்க.
குப்பை சமுதாயத்திற்கு இதுதான் வழி
இந்த சாக்கடை, குப்பை சமுதாயத்திற்கு லைவ்வா வந்து பரிணாமம் எடுத்தா தான் சரிபட்டு வரும்ன்னு திரும்ப வந்துருக்காங்க. இவர் என்னோட உதவியாளரா இருந்தவரு. இவரோட வாழ்நாள் நோக்கமே அரசுக்கு சேவை செய்வது தான். அதுனால தான் அவரு பரிணாமம் எடுத்து வந்துருக்காரு. நானும் அவரும் சேர்ந்து அருளாசி வழங்குனா தான் அது மக்களுக்கு முழுமையா போய் சேரும் என அன்னபூரணி அம்மா சொல்கிறார்.
நான் சீடன்
இவரைத் தொடர்ந்து பேசிய ரோஹித், நான் அவர்களுக்கு உதவியாளன் அல்ல. சீடன், பக்தன். நான் என்னை அர்பணித்து தீக்ஷை எடுத்து இவர்களுடன் இருந்தேன். சில ஆண்டுகளாக எனக்குள் பல பரிணாமங்கள் ஏற்பட்டதால் தான் இப்போது இந்த இடத்தை அடைந்திருக்கிறேன். நான் ஐடி வேலையை விட்டுவிட்டு இவருக்கு சேவை செய்ய வந்தேன்.
நீங்க என்ன அரசுன்னு சொன்னாலும் சரி.. அப்பாற்பட்ட சக்தின்னு சொன்னாலும் சரி. என்னை அரசுவோட சக்தி ஆட்கொள்ளுது என்கிறார்.
என் கூட குடும்பம் நடத்த முடியாது
அன்னபூரணி அம்மா ஆகிய என் அருகில் அரசுவைத் தவிர வேறு யாரும் அமர முடியாது. என் கூட சேர்ந்து வாழ்க்கையும் நடத்திட முடியாது. நான் தான் ரோஹித்திடம் போய் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டேன். இவரு முழுவதுமா அரசுவா மாறியதால, 5 வருடத்திற்கு முன் அரசுவோடு வாழ்ந்த வாழ்க்கை திரும்ப நடந்து கொண்டிருக்கிறது.
இங்கு வேலை இல்லாதவர்கள் தான் எங்கள் திருமணத்தை குறை சொல்கிறார்கள். எங்கள் திருமணத்தால் பலரும் சந்தோஷமாக இருக்கின்றனர்.
ஒரு பைசா கூட வாங்கமாட்டேன்
இங்கு ஆன்மீகம் என்பது வியாபாரம். ஆனால், நாங்கள் 3 வருடமாக சேவை செய்கிறோம். என்னைத் தேடி வரும் மக்களிடமிருந்து ஒரு பைசா கூட வாங்கியது இல்லை. அதனால் தான் எங்களை தொடர்ந்து விமர்சித்து கேலி பேசி வருகின்றனர்.
என் முன் வந்து முழு மனதுடன் அம்மா எனக் கூப்பிட்டாலே போதும். உங்கள் பிரச்சனையை சொல்லக் கூடத் தேவையில்லை. எல்லாம் நிறைவேறும். உனக்கு சக்தி இருப்பதை நிரூபி எனக் கூறுவோர்களின் ஆணவத்திற்கு நான் இறங்கி வர மாட்டேன்.
ஆரம்பத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு அருளாசி கொடுத்து வந்தோம். ஆனால், சொல்ல முடியாத அளவு மிரட்டல்களும் நிர்பந்தங்களும் ஏற்பட்டதால் நாங்கள் திருவண்ணாமலைக்கு வந்தோம்.
அது ஹனிமூன் ட்ரிப் இல்ல
நாங்கள் இருவரும் திருமணம் முடிந்து மலேசியா சென்றது அங்கு அருளாசி வழங்குவதற்காகத் தான். அது ஹனிமூன் ட்ரிப் அல்ல. எங்களை விமர்சித்தாவது உலகம் முழுக்க கொண்டுபோய் சேர்க்கின்றனர்.
நான் திருவண்ணாமலைக்கு வந்த பின் 500 கோடி சொத்து சேர்த்ததாக சொல்கின்றனர். ஆனால் நான் 3 வருடமாக ஒரு பைசா கூட பக்தர்களிடம் காசு வாங்கியதில்லை, என் திருமணத்தையும் எனக்கான செலவையும் இங்கு வேலை செய்ய வருவோர் தான் செய்கிறார்கள் எனக் கூறியுள்ளனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்