Tamil News  /  Entertainment  /  Annapoorani Movie Removed From Ott Netflix

Annapoorani: வெடித்த சர்ச்சை.. ஓடிடியில் இருந்து அன்னபூரணி நீக்கம்

Aarthi Balaji HT Tamil
Jan 11, 2024 12:13 PM IST

அன்னபூரணி படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.

அன்னபூரணி
அன்னபூரணி

ட்ரெண்டிங் செய்திகள்

இது நடிகை நயன்தாராவின் 75வது படமாகும். இந்த திரைப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ளார். சமையல் தொழிலில் சாதிக்க நினைக்கும் பெண்ணின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

செஃப் ஆக வேண்டும் என்ற ஆசையில் வீட்டில் இருந்து வரும் நயன்தாரா கடைசியில் தன் கனவை அடைந்தாரா? என்பதே பட கதை.

பிராமண குடும்பத்தில் பிறந்த நயன்தாரா, ஆசைவ உணவுகளை சாப்பிடுவதும், சமைப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த காட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்து அமைப்பை சேர்ந்த ரமேஷ் சோலங்கி மத உணர்வை ஏற்படுத்தும் வகையில் படம் எடுக்கப்பட்டது என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்து தயாரிப்பு நிறுவனமான ஜீ எண்டர்டமென்ட் அறிக்கை ஒன்றை பதிவிட்டு உள்ளது. 

அதில், ”உங்களின் மேற்கூறிய கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளோம். மேலும் அதில் உள்ளவற்றைக் கவனத்தில் கொண்டுள்ளோம்.

இது தொடர்பாக, எங்கள் இணை தயாரிப்பாளர்களான எம் இன் இன்டென்ட் ஆர்டிஃபோவுடன் ஒருங்கிணைந்து, மேற்கூறிய திரைப்படம் தொடர்பான உங்கள் கவலைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். 

மேலும் நெட்ஃபிளிக்ஸ் மூலம் படத்தைத் திருத்தும் வரை உடனடியாக அவர்களின் தளத்திலிருந்து அகற்ற சொல்லி இருக்கிறோம்.

இந்து மற்றும் பிராமணர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படத்தின் இணை தயாரிப்பாளர்கள் என்ற முறையில் எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை. மேலும் அந்தந்த சமூகத்தினரின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்.

நன்றி, ஜீ எண்டர்டமென்ட் எண்டர்பிரைசஸ்” எனக் குறிப்பிட்டு உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.