‘நடிகையின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அரசியலா?..அவ்வளவுதான் மரியாதை.. புஸ்ஸி குஸ்ஸியெல்லாம்..’- விஜயை தாக்கிய அண்ணாமலை!
அவர்கள் அவர்களின் எல்லையை தாண்டக்கூடாது. அறிக்கை விடும் பொழுது, அறிக்கைக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். நான் என்ன நடிகைகளின் இடுப்பைக் கிள்ளிக்கொண்டு அவர்களுடன் நடனம் ஆடிக்கொண்டு அங்கிருந்து அறிக்கையை விட்டுக் கொண்டிருக்கிறேனா? - அண்ணாமலை!

‘நடிகையின் இடுப்பைக் கிள்ளிக்கொண்டு அரசியலா?..அவ்வளவுதான் மரியாதை.. புஸ்ஸி குஸ்ஸியெல்லாம்..’- விஜயை தாக்கிய அண்ணாமலை!
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, பாஜக மார்ச் 17ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் பாஜக முக்கிய தலைவர்கள் உட்பட பலரும் போராட்டம் நடத்த முயன்றனர்.
ஆனால், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை காரணம் காட்டி போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலை 6 மணிக்கு மேலாகியும் அவர்களை காவல்துறை விடுவிக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் காவல்துறைக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
