தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Annamalai Congratulated Vijay For Starting A New Party Against Corrupt Politics

Vijay: 'ஊழல் அரசியலுக்கு எதிராக புதிய கட்சி' - விஜயை வாழ்த்திய அண்ணாமலை

Marimuthu M HT Tamil
Feb 02, 2024 05:15 PM IST

தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராக புதிய கட்சித்தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

'ஊழல் அரசியலுக்கு எதிராக புதிய கட்சி' - விஜயை வாழ்த்திய அண்ணாமலை
'ஊழல் அரசியலுக்கு எதிராக புதிய கட்சி' - விஜயை வாழ்த்திய அண்ணாமலை

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, ‘’தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் திரு. விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’எனப் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலையின் வாழ்த்துப் பதிவிற்குக் கீழே பல்வேறு பதிவர்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில், ‘’2026க்குப் பிறகு தமிழக அரசியலில் பாஜகவும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் முக்கிய சக்திகளாக விளங்குகின்றன. வரவேற்கத்தக்க மாற்றம் போல் தெரிகிறது’’ என்றார். மேலும், மற்றொருவர், ‘’சரியான போட்டி. அண்ணாமலை Vs உதயநிதி Vs விஜய். இந்த மூவரும் அடுத்த தலைமுறைக்கான அரசியல்வாதிகள்’’ எனப் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக விஜய் தனது ரசிகர் மன்றத்தை ஒரு பொது நல அமைப்பாக மாற்றி, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது அரசியல் கனவை வளர்த்து வந்தார். அவரது அரசியல் பிரவேசத்திற்காக விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இலவச உணவு விநியோகம், கண் தானம், இரவு நேர ஆய்வு மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார். மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார். கன மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு அவர் சமீபத்தில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்.

தான் அரசியலுக்கு வரப்போகிறேன் என மறைமுகமாக சமீப காலமாக சொல்லி கொண்டே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர், அரசியலுக்குள் நுழைந்து தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்தனர். அதேபோல், திரைக்கதை எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்துள்ளார். அந்த வழியில் தேமுதிக என்னும் கட்சியைத் தொடங்கி, மறைந்த நடிகர் விஜயகாந்த், எதிர்க்கட்சி அந்தஸ்துவரைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.