Anna : சண்முகத்துக்கு ஷாக் கொடுத்த தமிழரசி, கதறி அழும் பரணி!
அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து காண்போம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அண்ணா.
இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பரணி சண்முகத்துடன் வண்டியில் வந்து இறங்க இதை பார்த்த சௌந்தரபாண்டி கோபமடைகிறான். ஆனால் எதையும் வெளி காட்டிக் கொள்ளாமல் சண்முகத்துடன் நல்லபடியாக பேசி அவன் கிளம்பிய பிறகு பரணியிடம் கோபப்படுகிறான்.
ஒழுங்கா ஊருக்கு ஏத்த மாதிரி நடந்துக்க, உனக்கும் பாத்திரக்கடைக்கார ஓனர் பையனுக்கும் கல்யாணம் பேசி முடித்திருக்கிறேன். நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த ஊர்ல தான் இருக்கணும் என சொல்ல பரணி அதிர்ச்சி அடைகிறாள்.
அதற்கு அடுத்ததாக இங்கே சண்முகம் வீட்டில் தமிழரசி என்ற கேரக்டர் அறிமுகம் ஆகிறது. அதாவது சண்முகத்தின் அம்மாவின் அண்ணன் மகள் என்பது தெரிய வருகிறது. சண்முகத்தை கட்டிக் கொள்ள வேண்டும் என ஆசையாக இருக்கும் தமிழரசி பரணியுடன் இவன் பைக்கில் சென்ற விஷயத்தை தெரிந்து வந்து சண்முகத்தின் தங்கைகளிடம் சண்டையிடுகிறாள்.
இந்த சமயம் பார்த்து சண்முகம் ஹாயாக பாட்டு பாடிக்கொண்டு வீட்டுக்கு வர தமிழரசி அவனிடம் நீ எவளையோ கூட்டிகிட்டு பைக்ல போற, நான் உன் கூட வரேன்னு சொன்னதுக்கு இந்த பைக்ல என் தங்கச்சிங்களை தவற வேற யாரையும் ஏற்ற மாட்டேன்னு சொன்னியே, இப்ப யாரை ஏத்திட்டு போன என கேள்வி கேட்க சண்முகம் நான் யாரையும் கூட்டிட்டு போல என சமாளிக்கிறான்.
ஆனால் தமிழரசி ஊர்க்காரர்கள் யாரோ வீடியோ எடுத்து அதை ரீல்ஸ் வீடியோவாக தயார் செய்து இன்ஸ்டாகிராமில் போட்ட வீடியோவை எடுத்துக்காட்டி அதிர்ச்சி கொடுக்கிறாள். அப்போதும் சண்முகம் அது நான் இல்லை என சமாளிக்கிறான். இந்த சமயம் பார்த்து துபாயில் இருந்து ஒருவர் சண்முகத்துக்கு போன் செய்து ரீல்ஸ் பார்த்தேன் ரொம்ப சூப்பரா இருக்கு என சொல்ல சண்முகம் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறான்.
அதன் பிறகு வெட்டுக்கிளியின் போனை வாங்கிக் கொண்டு பாத்ரூம் சென்று அந்த ரீல்ஸ் வீடியோவை பார்த்து சந்தோஷப்படுகிறான். பிறகு வெளியே வர வெட்டுக்கிளி சவுண்டு கொஞ்சம் கம்மியா வைத்து பார்த்திருக்கலாம் என கலாய்க்கிறான்.
அதற்கு அடுத்ததாக சௌந்தரபாண்டி வீட்டில் பரணி அப்பா கல்யாணம் என சொன்னதை நினைத்து அழுது கொண்டிருக்க பாக்கியம் அவளை சமாதானம் செய்கிறாள். அப்போது காலேஜில் எனக்கு ஒருவரை பிடிச்சிருக்கு அவரை கல்யாணம் பண்ணிக்க போறேன் என பரணி சொல்ல பாக்கியம் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக வாக்கு கொடுக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9