சண்முகத்துக்கு சவால் விடும் பரணி.. விஷம் குடித்த வெட்டுக்கிளி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சண்முகத்துக்கு சவால் விடும் பரணி.. விஷம் குடித்த வெட்டுக்கிளி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

சண்முகத்துக்கு சவால் விடும் பரணி.. விஷம் குடித்த வெட்டுக்கிளி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Aarthi Balaji HT Tamil
Published Jun 20, 2025 01:57 PM IST

பாக்கியம் வீட்டிற்கு வந்ததும் அந்த வீட்ல இருந்து இன்னொரு பொண்ணு இந்த வீட்டிற்கு வர கூடாது என்று சொல்ல பாக்கியம் வீரா தான் இந்த வீட்டு மருமகள் என்று சொல்கிறாள்.

சண்முகத்துக்கு சவால் விடும் பரணி.. விஷம் குடித்த வெட்டுக்கிளி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
சண்முகத்துக்கு சவால் விடும் பரணி.. விஷம் குடித்த வெட்டுக்கிளி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அதாவது, வைஜெயந்தி சௌந்தரபாண்டிக்கு போன் செய்து தகவல் சொல்ல ஷாக் ஆகிறார். பாக்கியம் வீட்டிற்கு வந்ததும் அந்த வீட்ல இருந்து இன்னொரு பொண்ணு இந்த வீட்டிற்கு வர கூடாது என்று சொல்ல பாக்கியம் வீரா தான் இந்த வீட்டு மருமகள் என்று சொல்கிறாள்.

அடுத்து பரணியும் பாக்கியமும் சிவபாலனிடம் பேச அவன் வீராவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நான் எப்போ சொன்னேன் என்று சொல்கிறான், அடுத்து பாக்கியம் சண்முகம் சூடாமணி சொன்னா மட்டும் தான் கேட்பான். அதனால் சூடாமணி உன் உடம்புல இறங்கின மாதிரி நடி என்று ஐடியா கொடுக்கிறாள்.

வீட்டிற்கு வந்த பரணி சூடாமணி இறங்கியது போல் நடித்து வீராவுக்கும் சிவபாலனுக்கும் கல்யாணம் செய்து வைக்க சொல்கிறாள். சண்முகம் பரணி மீது சந்தேகம் அடைந்து அம்மாவை மலையேற்ற கற்பூரத்தை ஏற்றி கொண்டு வந்து வாயில் போட போக பரணி நான் தான் சொன்னேன் என்று உண்மையை சொல்லி விடுகிறாள்.

சண்முகம் உங்க வீட்டிற்கு இன்னொரு தங்கச்சியை அனுப்ப முடியாது என்று சொல்ல பரணி சிவபாலனுக்கும் வீராவுக்கும் தான் கல்யாணம் நடக்கும் என்று சவால் விடுகிறாள்.

அடுத்து உடன்குடி சண்முகம் கடை பக்கமாக வர வெட்டுக்கிளி மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். சண்முகத்துக்கு தகவல் தெரிந்து ஹாஸ்பிடல்க்கு தூக்கி செல்ல அவன் விஷம் குடித்து இருப்பது தெரிய வருகிறது.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.