அண்ணா சீரியல் மார்ச் 26 எபிசோட்: சண்முகம், பரணிக்கு காத்திருந்த ஏமாற்றம்.. கல்யாணத்துக்கு தயாராகும் அறிவழகன்?
அண்ணா சீரியல் மார்ச் 26 எபிசோட்: அறிவழகன் தனக்கு பார்த்திருக்கும் பெண்ணை பிடித்திருப்பதாக சொல்ல சண்முகம், பரணி ஏமாற்றம் அடைகிறார்கள். வெங்கடேஷ் போன் காலால் பிரச்னை ஏற்பட அடுத்த நடக்கும் திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் காட்சிகள் இடம்பிடித்துள்ளன.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம், பரணி ஆகியோர் ரத்னாவுடன் அறிவழகன் வீட்டுக்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரத்னாவை பெண் பார்க்க வரும் அறிவழகன் குடும்பத்தினர்
அதாவது ரத்னா தனக்கு கல்யாணம் பேச தான் அழைத்து செல்கிறார்கள் என தெரியாமல் வருகிறாள். இங்கே அறிவழகன் குடும்பத்தினர் அவனுக்கு பெண் பார்ப்பதற்காக கிளம்பி இருக்க, அது தெரிந்து அதிர்ச்சி அடைகின்றான்.
ஆனாலும் வேறு வழியில்லாமல் அவர்களுடன் செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. பெண் பார்க்க போன இடத்தில அறிவழகன் பக்கத்தில் ரத்னா உட்காருகிறாள். அந்த பெண்ணும் அறிவழகனை பிடித்திருப்பதாக சொல்கிறாள். இதனால் சண்முகம் மற்றும் பரணி ஏமாற்றம் அடைகின்றனர்.
