அண்ணா சீரியல் ஜூன் 4 எபிசோட்: சௌந்தர பாண்டியை கொல்ல துணிந்த சண்முகம்.. வைஜெயந்தி போடும் புது கணக்கு
வைஜெயந்தி இவை அனைத்தையும் தூரத்திலிருந்து பார்த்து சண்முகத்துக்கு சௌந்தரபாண்டி மேல தான் சந்தேகம் வந்திருக்கு என நிம்மதி அடைகிறாள். தன்னுடைய ஆட்களிடம் சௌந்தரபாண்டியை சந்திக்க ஏற்பாடு செய்ய சொல்கிறாள்.

அண்ணா சீரியல் ஜூன் 4 எபிசோட்: சௌந்தர பாண்டியை கொல்ல துணிந்த சண்முகம்.. வைஜெயந்தி போடும் புது கணக்கு
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தர பாண்டி எதற்கு சொன்ன விஷயத்தை வெட்டு கிளி கேட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது பார்க்கலாம் வாங்க.
அதாவது, வெட்டுக்கிளி சண்முகத்துடன் எல்லாத்தையும் செய்தது சௌந்தரபாண்டி தான் என்று சொல்ல சண்முகம் கையில் வைத்திருந்த தூக்கு கயிறுடன் சௌந்தரபாண்டியை சந்தித்து கொல்ல முயற்சிக்க பரணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் போராடி அவரை காப்பாற்றுகின்றனர்.