அண்ணா சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: சண்முகத்தை நம்ப மறுக்கும் பரணி.. கையும் களவுமாக சிக்கிய திருடர்கள்.. அண்ணா சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: சண்முகத்தை நம்ப மறுக்கும் பரணி.. கையும் களவுமாக சிக்கிய திருடர்கள்.. அண்ணா சீரியல்

அண்ணா சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: சண்முகத்தை நம்ப மறுக்கும் பரணி.. கையும் களவுமாக சிக்கிய திருடர்கள்.. அண்ணா சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Apr 04, 2025 11:18 AM IST

அண்ணா சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: பரணிக்கு வாங்கிய செயினை திருடிச் சென்றவர்களை முத்துப் பாண்டி கையும் களவுமாக பிடித்து அவர்களிடமிருந்து செயினை வாங்குகிறான்.

அண்ணா சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: சண்முகத்தை நம்ப மறுக்கும் பரணி.. கையும் களவுமாக சிக்கிய திருடர்கள்.. அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: சண்முகத்தை நம்ப மறுக்கும் பரணி.. கையும் களவுமாக சிக்கிய திருடர்கள்.. அண்ணா சீரியல்

சண்முகத்தை நம்பாத பரணி

அதாவது சண்முகம் வாங்கிய செயினை யாரோ கொள்ளையடித்து விட்டதாக சொல்ல சௌந்தரபாண்டி சந்தோசப்படுகிறார். ஆனால் பரணி நீ யார் கூடவோ சண்டை போட்டு வந்திருக்க என சண்முகம் சொல்வதை ஏற்க மறுக்கிறாள்.

அடுத்த நாள் வீராவுக்கு சப் இன்ஸ்பெக்டராக வேலை சேர லெட்டர் வர வீட்டில் உள்ள எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். இதையடுத்து சண்முகம் உனக்கு செயின் வாங்கி தருவதாக சொல்ல பரணி சண்முகத்தை முறைக்க சண்முகம் பரணியை பார்க்கிறான்.

கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள்

அடுத்து சண்முகமும் முத்துபாண்டியும் செயின் எடுக்க கடைக்கு வர அதே ரவுடிகள் அதே கடைக்கு வருகின்றனர். சண்முகம் இதை பார்க்க முத்துப்பாண்டி நீ அவங்க மேல கையை வைக்காதே.. நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அவர்களை கையும் களவுமாக பிடிக்கிறான்.

அவர்களிடம் செயினை வாங்குகிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

பரணியின் பிறந்தநாள்

முன்னதாக, பாக்கியம் பரணிக்கு போன் செய்து நாளைக்கு கோயிலுக்கு போயிட்டு வா.. உனக்கு பிறந்தநாள் என்று சொல்ல, பரணிக்கு நாளைக்கு தனக்கு பிறந்தநாள் என்பது நினைவுக்கு வருகிறது. அடுத்ததாக சண்முகம் சந்தோஷமாக ரூமுக்குள் வர, நாளைக்கு என்ன நாள் தெரியுமா என்று பரணி கேட்க, சண்முகம் நாளைக்கு என்ன ஒன்னும் இல்ல என்று சொல்லிவிட, பரணி வருத்தம் அடைகிறாள்.

தங்கைகளை பற்றி மட்டுமே யோசிக்கும் சண்முகம்

உடனே, பரணி தங்கச்சிகளை பத்தி மட்டும் தான் யோசிப்பியா என்று கேட்க, சண்முகம் வேற எதைப்பற்றி யோசிக்கணும் என்று கேள்வி கேட்க, பரணி ஏமாற்றம் அடைகிறாள்.

சௌந்தரபாண்டி செய்யும் சூழ்ச்சி

அண்ணி இன்னைக்கே உங்களுக்கு பிறந்தநாள்ல என்பதை கண்டுபிடிக்க, சண்முகம் ஷாக் ஆகிறான். இந்த சமயத்தில் சௌந்தரபாண்டி கிஃப்ட் கொண்டு வந்து கொடுத்து, பெத்தவங்க மட்டும்தான் உன்னுடைய பிறந்தநாளை ஞாபகம் வச்சுப்பாங்க என சொல்கிறான்.

பிறகு தங்கச்சிகள் கொடுத்த ஐடியாவை கேட்டு சண்முகம் பரணிக்கு செயினை கிஃப்டாக வாங்க கடைக்கு செல்ல, சௌந்தரபாண்டி அந்த செயினை திருட ஆட்களை ஏற்பாடு செய்கிறார்.