அண்ணா சீரியல் ஜூன் 9 எபிசோட்: கடத்தியவனை வரைந்து காட்டும் கனி.. சண்முகத்தின் சத்தியத்தால் ஷாக்காகும் பரணி
அண்ணா சீரியல் ஜூன் 9 எபிசோட்: சண்முகம் கனியை கடத்திச் செல்லும் வண்டியை மடக்கி பிடிக்க, ரவுடிகள் கனியை இறக்கி விட்டு எஸ்கேப்பாகி விடுகின்றனர்.

அண்ணா சீரியல் ஜூன் 9 எபிசோட்: கடத்தியவனை வரைந்து காட்டும் கனி.. சண்முகத்தின் சத்தியத்தால் ஷாக்காகும் பரணி
கடத்தியவனை வரைந்து காட்டும் கனி.. சண்முகத்தின் சத்தியத்தால் ஷாக்காகும் பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் வைஜயந்தியின் ஆட்கள் கனியை கடத்தி சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
வண்டியை மடக்கிய சண்முகம்
அதாவது, சண்முகம் கனியை கடத்திச் செல்லும் வண்டியை மடக்கி பிடிக்க, ரவுடிகள் கனியை இறக்கி விட்டு எஸ்கேப்பாகி விடுகின்றனர். பிறகு கனியிடம் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.. உன்னை கடத்தினவங்களில் ஒருத்தனையாவது நியாபகம் இருக்கா? அதை அப்படியே வரைந்து கொடு, மத்ததை நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறான்.