அண்ணா சீரியல் ஜூன் 6 எபிசோட்: கடத்தப்படும் கனி.. தங்கையை காப்பாற்ற சீறி பாயும் சண்முகம்.. அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் ஜூன் 6 எபிசோட்: வைஜெயந்தியின் ஆட்கள் கனியை கடத்திய நிலையில், அவளைக் காப்பாற்ற சண்முகம் விரைந்து புறப்படுகிறான்.

அண்ணா சீரியல் ஜூன் 6 எபிசோட்: கடத்தப்படும் கனி.. தங்கையை காப்பாற்ற சீறி பாயும் சண்முகம்.. அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் ஜூன் 6 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் வைஜெயந்தியின் ஆட்கள் கனியை கடத்த தயாராக இருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கோவிலுக்கு கிளம்பும் ரத்னா
அதாவது ரத்னா கோவிலுக்கு கிளம்புகிறாள். அறிவழகன் இந்த விஷயம் அறிந்து நானும் உன் கூட வருகிறேன் என்று கிளம்புகிறான். இதைப் பார்த்த மாலதி டீச்சர் உங்களுக்கு முன்னாடி நான் கோவிலுக்கு போறேன் என்று கிளம்பி செல்கிறாள்.