அண்ணா சீரியல் ஜூன் 22 எபிசோட்: வெட்டுக்கிளிக்கு கல்யாணம்.. மாறுவேடத்தில் சண்முகம், பரணி
அண்ணா சீரியல் ஜூன் 22 எபிசோட்: வெட்டுக்கிளிக்கு கல்யாணம்.. மாறுவேடத்தில் சண்முகம், பரணி - கலகலப்பும் பரபரப்பும் நிறைந்த அண்ணா சண்டே ஸ்பெஷல்.!!

வெட்டுக்கிளிக்கு கல்யாணம்.. மாறுவேடத்தில் சண்முகம், பரணி - கலகலப்பும் பரபரப்பும் நிறைந்த அண்ணா சண்டே ஸ்பெஷல்.!!
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் வெட்டுக்கிளி விஷம் குடித்து மயங்கி கிடக்க, அவனை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம் மாலை 5 மணிக்கு சண்டே ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சண்டே ஸ்பெஷல் எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது வெட்டுக்கிளி நான் ஸ்கூல் படிக்கும்போது இருந்து ஒரு பொண்ண காதலிச்சு, அந்த பொண்ணுக்கு இப்போ வேற ஒருத்தன் கூட கல்யாணம். எனக்கு பொண்ணு தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க; அவ இல்லாம என்னால வாழ முடியாது என்று சொல்கிறான்.