அண்ணா சீரியல் மார்ச் 21 எபிசோட்: மனம் இறங்கிய சண்முகம்.. விளையாடும் பரணி - அண்ணா சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் மார்ச் 21 எபிசோட்: மனம் இறங்கிய சண்முகம்.. விளையாடும் பரணி - அண்ணா சீரியல்

அண்ணா சீரியல் மார்ச் 21 எபிசோட்: மனம் இறங்கிய சண்முகம்.. விளையாடும் பரணி - அண்ணா சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Mar 21, 2025 01:14 PM IST

அண்ணா சீரியல் மார்ச் 21 எபிசோட்: விசாவிற்காக சென்னை வந்த பரணியை பீச்சில் வைத்து சண்முகம் சமாதானம் செய்ய முயற்சிக்கிறான்.

அண்ணா சீரியல் மார்ச் 21 எபிசோட்: மனம் இறங்கிய சண்முகம்.. விளையாடும் பரணி - அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் மார்ச் 21 எபிசோட்: மனம் இறங்கிய சண்முகம்.. விளையாடும் பரணி - அண்ணா சீரியல்

உண்மையை சொன்ன முத்துப்பாண்டி

அதாவது, முத்துப்பாண்டி சண்முகத்திடம் அவ உன்னை விட்டுட்டு போகணும்னு நினைச்சிருந்தா என்னைக்கோ போய் இருக்கா.. அவ உனக்காக தான் போகாமல் இருக்கா அதை நீ தான் புரிந்து கொள்ளணும் என்று சொல்கிறான்.

அவ நீ வருவ என்ற நம்பிக்கையில் தான் தனியா போய் இருக்கா என்று வைகுண்டம் சொல்ல சண்முகம் தான் செய்த தவறை புரிந்து கொள்கிறான். பரணி அமெரிக்கா போறேன் என்று சொன்னதும் அவளுக்கு துணையாக நான் நின்னு இருக்கனும் என்று நினைக்கிறான்.

தட்டிக் கழிக்கும் பரணி

பிறகு நீ இந்த உலகத்துல எந்த மூளைக்கு போனாலும் நாக் வருவேன் என்று சொல்லி சென்னைக்கு கிளம்பி செல்கிறான். இதையடுத்து பரணி விசா ப்ராசஸ்க்காக லைனில் நின்று கொண்டிருக்க சண்முகம் ஆட்டோவில் வந்து இறங்குகிறான்.

பரணி இங்க எதுக்கு வந்த? என்று கேட்க என் பொண்டாட்டிக்காக வந்ததாக சொல்கிறான். நான் செய்தது தப்பு தான் என மன்னிப்பு கேட்கிறான், இவ்வளவு பேர் இருக்காங்க நாளைக்கு பார்த்துக்கலாம் வாங்க என்று கூப்பிடுகிறான்.

சண்முகத்திற்கு சப்போர்ட் செய்யும் மக்கள்

அடுத்து பரணியிடம் சாப்பிட்டியா என்று கேட்க அவள் இல்லை என்று சொல்ல சண்முகம் லைனில் நிற்கும் அத்தனை பேருக்கும் டி பன் வாங்கி வந்து கொடுக்கிறான். எல்லாருக்கும் சண்முகத்தை பிடித்து போக அந்த தம்பி தான் இவ்வளவு கெஞ்சுதே என்று அவனுக்கு சப்போர்ட் செய்து பேசுகின்றனர். பரணி உங்களுக்கு இவனை பத்தி தெரியாது என சொல்கிறாள்.

சமாதானம் செய்யும் சண்முகம்

அடுத்து விசா ப்ராசஸ் முடிந்ததும் ரெண்டு பேரும் பீச்சுக்கு செல்கின்றனர், சண்முகம் நீ எங்க வேணா போ.. நான் உனக்கு துணையா இருப்பேன் என்று வாக்கு கொடுக்கிறான். பிறகு பரணி பீச்சில் கால் நனைக்க பெரிய அலை அவளை கீழே தள்ள சண்முகம் அவளுக்கு என்னாச்சு என அதிர்ச்சி அடைகிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.