அண்ணா சீரியல் ஏப்ரல் 15 எபிசோட்: மொட்டையனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. சண்முகத்தின் பலே ஐடியா! - நடந்தது என்ன?
அண்ணா சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: கனி அப்படியே சரியாக வரைந்திருக்க, வீரா இவன் தான் என்று அடையாளம் காட்டுகிறாள். விடிவதற்குள் அவனை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என திட்டம் போடுகின்றனர்.

அண்ணா சீரியல் ஏப்ரல் 15 எபிசோட்: கச்சிதமாக வரைந்து முடித்த கனி.. சண்முகத்தின் தரமான திட்டம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீரா சந்தேப்படும் மொட்டையன் குறித்து சொல்ல சொல்ல கனி அதனை வரைந்து முடித்தாள். நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
அதாவது, கனி அப்படியே சரியாக வரைந்திருக்க, வீரா இவன் தான் என்று அடையாளம் காட்டுகிறாள். விடிவதற்குள் அவனை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என திட்டம் போடுகின்றனர். உடனே சண்முகம் அதை நான் பார்த்துகிறேன், அதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு என்று சொல்கிறான். அடுத்ததாக மொட்டையன் இறந்து விட்டதாக சொல்லி கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ரெடி செய்கிறான்.
மேலும் அந்த போஸ்டரில் மேலும் தகவல்களுக்கு என்று சொல்லி தனது போன் நம்பரையும் கொடுக்கிறான். அந்த மொட்டையனை யாராவது பார்த்தால் உடனே போன் செய்து அவன் இருக்கும் இடத்தை சொல்லி விடுவார்கள் என கணக்கு போடுகிறான்.
போலீஸ் அதிகாரி வைஜெயந்தியும் இந்த போஸ்டரை பார்த்து இவன் செத்துட்டானா என்று சந்தேகம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்