அண்ணா சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: போலீஸ் கனவுக்கு ஆப்பு…வைஜெந்தியால் வந்த வினை! - பதற்றத்தில் சண்முகம்!
அண்ணா சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில், வீராவும் வைகுண்டமும் பஸ்ஸில் ஏறி செல்ல, வைஜெயந்தி ஏற்பாடு செய்த ரவுடிகளும் பின்தொடர்ந்து சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குருத்து பார்க்கலாம் வாங்க.

அண்ணா சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: கைது செய்யப்படும் வீரா.. சண்முகத்திற்கு காத்திருக்கும் சவால், சதியை முறியடிக்க போவது எப்படி? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில், வீராவும் வைகுண்டமும் பஸ்ஸில் ஏறி செல்ல, வைஜெயந்தி ஏற்பாடு செய்த ரவுடிகளும் பின்தொடர்ந்து சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குருத்து பார்க்கலாம் வாங்க.
பேரதிர்ச்சியில் சண்முகம்
அதாவது, ரவுடிகள் வீராவை திசைத் திருப்பி நகையை அவளது பைக்குள் போட்டு விடுகின்றனர். இது பிரச்சினையாக, வைஜெயந்தி வீராவின் பையில் இருந்து நகையை எடுக்கிறாள். வீராவும் வைகுண்டமும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதனையடுத்து, ஓ நீ திருடியா என வீராவை கைது செய்யும் வைஜெயந்தி அவளை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து உட்கார வைக்கிறாள். இந்த விஷயம் அறிந்த முப்பிடாதி சண்முகத்துக்கு போன் செய்து தகவல் சொல்ல சண்முகம் பேரதிர்ச்சி அடைகிறான்.
உடனே ஸ்டேஷனுக்கு கிளம்பி வரும் அவன், இதெல்லாம் வைஜெயந்தி திட்டமாக கூட இருக்கலாம் என சந்தேகப்படுகிறான். வீரா மேல கேஸ் எழுதிட்டா அவளுடைய கனவு மொத்தமா இல்லாமல் போய்டும், அதுக்கு முன்னாடி உண்மையை கண்டு பிடிக்கணும் என சொல்கிறான்.
உனக்கு போலீஸ் மூளை.. அங்க கண்டிப்பா ஏதாவது தப்பா நடந்திருக்கும், சந்தேகப்படுற மாதிரி ஏதாவது நடந்துச்சா யோசி யோசி என யோசிக்க சொல்கிறான். வீராவும் சம்பவ இடத்தில நடந்தது என்ன என்று யோசிக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

டாபிக்ஸ்