அண்ணா சீரியல் ஏப்ரல் 10 எபிசோட்: சண்முகத்தை அவமானப்படுத்தும் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அண்ணா சீரியல் ஏப்ரல் 10 எபிசோட்: சண்முகத்தை அவமானப்படுத்தும் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல்

அண்ணா சீரியல் ஏப்ரல் 10 எபிசோட்: சண்முகத்தை அவமானப்படுத்தும் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Apr 10, 2025 01:56 PM IST

அண்ணா சீரியல் ஏப்ரல் 10 எபிசோட்: கல்யாணம் ஆகி பல மாதங்கள் ஆகியும் பரணி கர்ப்பமாகாததை கிண்டல் செய்து சௌந்தரபாண்டி சண்முகத்தை அசிங்கப்படுத்துகிறார்.

அண்ணா சீரியல் ஏப்ரல் 10 எபிசோட்: சண்முகத்தை அவமானப்படுத்தும் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல்
அண்ணா சீரியல் ஏப்ரல் 10 எபிசோட்: சண்முகத்தை அவமானப்படுத்தும் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல்

அசிங்கப்படும் சண்முகம்

அதாவது, மருந்து கொடுக்க வந்த பாட்டி இசக்கிக்கு முன்னாடி உனக்கு தான் கல்யாணம் ஆச்சு முதல்ல உனக்கு தான் மருந்து கொடுத்து இருக்கணும் என்று பரணியிடம் பேச சௌந்தரபாண்டியன் மற்றும் பாண்டியம்மா என இருவரும் சேர்ந்து கொண்டு முத்துப்பாண்டி ஆம்பள.. கல்யாணமானதும் பொண்டாட்டி கர்ப்பமாகிட்டா என்று சண்முகத்தை அசிங்கப்படுத்துவது போல் பேச பரணி சண்முகத்துக்கு ஆதரவாக பேசுகிறாள்.

அட்வைஸ் செய்த பாட்டி

இங்கே மருந்து கொடுக்க வந்த பாட்டி சௌந்தரபாண்டியை தனியாக அழைத்துச் சென்று உனக்கும் சண்முகத்துக்கும் பிரச்சனை இருக்கலாம் ஆனால் அந்த பொண்ணு கர்ப்பமாகணும் நம்ம வீட்டுக்கு அடுத்த வாரிசு வரணும் என்று சொல்ல தூரத்திலிருந்து இதை பார்த்த சண்முகம் தவறாக புரிந்து கொள்கிறான்.

கொஞ்ச நேரத்தில் இசக்கி மருந்து கொடுக்க அவள் வாந்தி எடுக்க மனிதன் சௌந்தரபாண்டி தான் ஏதோ செய்து விட்டான் என குற்றம் சாட்ட கடைசியில் இது அவனுடைய கற்பனை தெரிய வருகிறது. பிறகு இசக்கிக்கு ஒரு வழியாக நல்லபடியாக மருந்து கொடுக்கின்றனர்.

வீராவை துரத்தும் பிரச்சனை

இன்னொரு பக்கம் வீரா போலீசாக வேலையில் சேர தம்முடைய அப்பா வைகுண்டத்தை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு கிளம்புகிறாள். வைஜெயந்தி மாலா இரண்டு ரவுடிகளை ஏற்பாடு செய்து வீரா மீது எஃப்ஐஆர் போடுவதற்காக ஏற்பாடு செய்கிறார்.

இங்கே வைஜயந்தி மாலா ரவுடிகளிடம் ஒரு நகையை கொடுத்து வீரா, வைகுண்டம் ஏறும் பஸ்ஸில் ஏறி ஒரு திட்டத்தை சொல்லி பிராவில் பையில் நகையை வைத்து அவளை திருட்டு கேசில் உள்ளே தந்த திட்டம் போடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

இசக்கிக்கு மருந்து

முன்னதாக, பாக்கியம் சண்முகம் வீட்டிற்கு வந்து இசக்கிக்கு மருந்து கொடுப்பது பற்றி பேசி, அதுக்காக வீட்டிற்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்ல, மருந்து கொடுக்கிறதா இருந்தா இங்கே கொடுங்க என்று முத்துப்பாண்டி சொல்கிறான்.

பாக்கியம் அது முறை இல்ல.. வீட்டிற்கு கூட்டிட்டு போய் தான் மருந்து கொடுக்கணும் என்று சொல்கிறாள். முத்துப்பாண்டி உன் புருஷனை நம்பியெல்லாம் இசக்கியை அனுப்ப முடியாது என்று சொல்ல, இசக்கி தனக்கும் இதெல்லாம் நடக்கணும்னு ஆசையா இருப்பதாக சொல்கிறாள்.