Anjali: பெங்கலுக்கு டபுள் ரிலீஸ்.. எனது கேரக்டர் கேம் சேஞ்சராக இருக்கும்.. தேசிய விருது கிடைக்கும்! அஞ்சலி நம்பிக்கை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anjali: பெங்கலுக்கு டபுள் ரிலீஸ்.. எனது கேரக்டர் கேம் சேஞ்சராக இருக்கும்.. தேசிய விருது கிடைக்கும்! அஞ்சலி நம்பிக்கை

Anjali: பெங்கலுக்கு டபுள் ரிலீஸ்.. எனது கேரக்டர் கேம் சேஞ்சராக இருக்கும்.. தேசிய விருது கிடைக்கும்! அஞ்சலி நம்பிக்கை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 08, 2025 09:00 PM IST

Actress Anjali in Game Changer: பெங்கலுக்கு தனது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக இருக்கும் நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என நம்புவதாக நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.

பெங்கலுக்கு டபுள் ரிலீஸ்.. எனது கேரக்டர் கேம் சேஞ்சராக இருக்கும்.. தேசிய விருது கிடைக்கும்! அஞ்சலி நம்பிக்கை
பெங்கலுக்கு டபுள் ரிலீஸ்.. எனது கேரக்டர் கேம் சேஞ்சராக இருக்கும்.. தேசிய விருது கிடைக்கும்! அஞ்சலி நம்பிக்கை

இதுதொடர்பாக பிரபல தெலுங்கு ஊடகமான ஈநாடுக்கு நடிகை அஞ்சிலி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "இந்த ஆண்டில் பொங்கல் ரிலீஸாக இரு படங்கள் வெளிவருவதில் மகிழ்ச்சி. கேம் சேஞ்சர் படத்தில் என கதாபாத்திரம் பெயர் பார்வதி. எனது தாயாரின் பெயரும் அதுதான். எனவே அந்த கதாபாத்திரம் மிகவும் ஆழமாக கனெக்ட் ஆனது.

சர்ப்ரைஸ் விஷயங்கள் உள்ளன

இந்த கேரக்டருக்கான கடினமான உழைப்பை வெளிப்படுத்தியுள்ளேன். எனது சினிமா கேரியரில் கேம் சேஞ்சர் ஸ்பெஷலான படமாக இருக்கும்.படத்தில் எனது கதாபாத்திரம் குறித்து இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். ஏனென்றால் ஷங்கர் சார் இதில் சில சர்ப்ரைஸ் விஷயங்களை வைத்துள்ளார்.

இந்த படத்தில் நடிப்பது சவாலாக இருந்தது. ஏற்கனவோ சொன்னது போல் எனது அம்மாவின் பெயரும் பார்வதி என்பதால் சில காட்சிகளில் நடித்தபோது உணர்ச்சிபூர்வமாக இருந்தது. இதனால் மிகவும் மறக்க முடியாததாக மாறியுள்ளது.

90ஸ் லுக்கில் தோன்றுகிறேன்

நான் ராம்சரண் மனைவியாக வருகிறேன். எங்கள் இருவருக்கும் இடையிலான உறவுதான் கதையின் மையக்கருவாக இருக்கும். ராம் சரண் பாஸிடிவ் எனர்ஜி எல்லோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்தது. ஷங்கர் சார் படத்தில் பணியாற்றியது கனவு நிறைவேறிய தருணமாகும். அவரது படங்களில் பணியாற்ற விரும்பியது நடந்துள்ளது. ராம் சரண், தில் ராஜு தயாரிப்பு என எல்லாமே கூடுதல் ஸ்பெஷலாகவே உள்ளது.

நான் இதுவரை பல படங்களில் பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் இந்த படத்தில் 90களில் இருக்கும் குடும்ப தலைவி போன்ற லுக்கில் இயல்பான தோற்றத்தில் தோன்றியுள்ளேன்.

தேசிய விருது கிடைக்கும்

இந்த படத்திலிருந்து என கதாபாத்திர தேர்வில் மிக கவனமாக இருப்பேன். பார்வதி கதாபாத்திரம் என்னுள் நிறையா மாற்றங்களை செய்துள்ளது. எனது சினிமா வாழ்க்கையில் கேம் சேஞ்சராக இது அமைந்திருக்கும் என நம்புகிறேன்.

எனது நடிப்பை பார்த்து சிரஞ்சீவி பாராட்டியதாக கேள்விப்பட்டேன். இந்த கதையில் என கதாபாத்திரத்தை கேட்டவுடன் தேசிய விருதுக்கான வாய்ப்பு மிக்கதாக இருப்பதாக உணர்ந்தேன். தற்போது நிவின் பாலியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இது தவிர தெலுங்கில் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்" என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.