Actress Anjali: தொழிலதிபருடன் திருமணம்! அமெரிக்க வாழ்க்கை? அஞ்சிலி அளித்த பளிச் பதில்
பிரபல தொழிலிதபருடன் திருமணம் ஆகிவிட்டதாக வெளியான தகவலுக்கு நடிகை அஞ்சலி தெலுங்கு ஊடகத்துக்கு பளிச் பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அஞ்சலிக்கு, சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாமல் ஓடிடி பக்கம் ஒதுங்கினார். அதில் படுகவர்ச்சி, ஆக்ஷன் என வேறொரு அவதாரமெடுத்த போதிலும் வாய்ப்பு கதவுகள் திறக்கப்படவில்லை.
லவ் பண்ணா உட்ரனும் என்ற நெட்பிளிகஸ் சீரிஸில்,லெஸ்பியின் உறவு வைத்துக்கொள்ளும் பெண்ணாகவும், கவர்ச்சியான லிப் லாக் முத்த காட்சிகளிலும் நடித்து கவனத்தை ஈர்த்தார். கடைசியாக 2020இல் மாதவன், அனுஷ்கா நடிப்பில் வெளியான நிசப்தம் படத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து அஞ்சலி சைலெண்டாக தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்ட்லாகிவிட்டதாகவும், கிமிட்டான படங்களில் நடிப்பதற்கு மட்டும் இந்தியா வந்து செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு நடிகை அஞ்சலி இதுதொடர்பாக அளித்த பேட்டியில், " சினிமாவில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களே என்னைப்பற்றி எப்படி எழுத வேண்டும், யாருடனும் இணைத்து எழுத வேண்டும் என முடிவு செய்துவிடுகிறார்கள்.
முதலில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்து வருவதாக கூறினார்கள். இப்போது தொழிலதிபரை வைத்து கூறுகிறார்கள். எனக்கே தெரியாமல் திருமணம் ஆகிவிட்டதாகவும் தகவல் பரப்புகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
அஞ்சலி கடைசியாக தமிழில் 2020இல் நடித்தபோதிலும், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் மலையாளத்தில் ஒரு படம் வெளியானது.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஞ்சலி. படம் இந்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்