Anitha Kuppusamy: தவமாய் இருந்து பெற்ற குழந்தை.. வெடிக்க காத்திருந்த சிலிண்டர்..பாலாம்பிகாதான்’ - அனிதா குப்புசாமி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anitha Kuppusamy: தவமாய் இருந்து பெற்ற குழந்தை.. வெடிக்க காத்திருந்த சிலிண்டர்..பாலாம்பிகாதான்’ - அனிதா குப்புசாமி!

Anitha Kuppusamy: தவமாய் இருந்து பெற்ற குழந்தை.. வெடிக்க காத்திருந்த சிலிண்டர்..பாலாம்பிகாதான்’ - அனிதா குப்புசாமி!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 02, 2025 08:34 AM IST

Anitha Kuppusamy: பல வருட முயற்சியின் பலனாக வெள்ளிக்கிழமை எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அது ஆடி மாசம்; நாங்கள் அடுத்தடுத்த இசை நிகழ்ச்சிகளில் பரபரவென ஓடிக் கொண்டிருந்தோம். இதனால் எங்களை குழந்தையை சரிவர பார்த்துக் கொள்ள முடியாது என்பது தெரிந்து விட்டது. - அனிதா குப்புசாமி

Anitha Kuppusamy: தவமாய் இருந்து பெற்ற குழந்தை.. வெடிக்க காத்திருந்த சிலிண்டர்..பாலாம்பிகாதான்’ - அனிதா குப்புசாமி!
Anitha Kuppusamy: தவமாய் இருந்து பெற்ற குழந்தை.. வெடிக்க காத்திருந்த சிலிண்டர்..பாலாம்பிகாதான்’ - அனிதா குப்புசாமி!

பிரபல யூடியூப் தளமான பிஹைண்ட்வுட்ஸ் அண்மையில் ‘ஆன்மீக சங்கமம் 2025’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் பலரும் தங்கள் வாழ்வில், கடவுளின் சித்தத்தால் நடந்த ஆச்சரியமான சம்பவங்களை பகிர்ந்தார்கள். அந்த வரிசையில் அனிதா குப்புசாமியும் பேசினார்.

கருப்பையில் அடைப்பு

அவர் பேசும் போது, ‘இரண்டாவது குழந்தை பிறக்க எனக்கு கொஞ்சம் தாமதமாகிக் கொண்டே இருந்தது. அதற்காக பெரிய, பெரிய மருத்துவர்களையெல்லாம் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கருப்பையில் அடைப்பு இருக்கிறது என்றார்கள்.

அனிதா குப்புசாமி
அனிதா குப்புசாமி

ஒரு நாள் சிகிச்சை எடுத்துவிட்டு வந்து கொண்டிருந்தோம். திடீரென்று மழை பெய்து விட்டது. இந்த நிலையில் அங்கிருந்த ஒரு மருத்துவமனை பக்கமாக ஒதுங்கினோம். அப்போது நிறைய இடங்களில் பாடி கொண்டிருந்த காரணத்தால், நன்றாக பிரபலமாகி இருந்தோம். அதன் மூலம் கிடைத்த பிரபலமானது, அங்கிருந்த ஒருவரை சீக்கிரமாக அடையாளம் காண வைத்தது. அவர்தான் விவேக்கின் சகோதரி.

விவேக்கின் சகோதரி சொன்ன தகவல்

ஆம், நாங்கள் ஒதுங்கிய மருத்துவமனையில் அவர் மருத்துவராக இருந்தார். எங்களைப் பார்த்தவுடன் ஏன் வெளியே நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள் என்று சொல்லி மருத்துவமனை உள்ளே அழைத்துச் சென்றார். சகஜமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது, இந்த குழந்தை பிறப்புக்கான பிரச்சினை குறித்து பேச வேண்டிய சூழ்நிலை உருவானது. உடனே அவர் எங்களுடைய மருத்துவ விவரங்கள் அனைத்தையும் பார்த்தார்.

தொடர்ந்து என்னை ஒரு பரிசோதனைக்கும் உட்படுத்தினார். இறுதியாக அவர் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. எல்லாமும் சரியாக இருக்கிறது நிச்சயமாக உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறினார்.

பெண் குழந்தை பிறந்தது

பல வருட முயற்சியின் பலனாக வெள்ளிக்கிழமை எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அது ஆடி மாசம்; நாங்கள் அடுத்தடுத்த இசை நிகழ்ச்சிகளில் பரபரவென ஓடிக் கொண்டிருந்தோம். இதனால் எங்களை குழந்தையை சரிவர பார்த்துக் கொள்ள முடியாது என்பது தெரிந்து விட்டது.

இந்த நிலையில், குழந்தையை பார்த்துக்கொள்வதற்காக, ஒரு பெண்ணை நாங்கள் நியமித்திருந்தோம். அந்தப் பெண்ணிடம், குழந்தைக்கு எந்தெந்த நேரத்தில் எந்தெந்த உணவு கொடுக்க வேண்டும்; எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எல்லா விவரங்களையும் திட்டமிட்டு கொடுத்திருந்தோம். அதன்படி அவரும் செய்து கொண்டிருந்தார்.

எங்கள் வீட்டில் எப்போதுமே இரண்டு சிலிண்டர்களும் சமையலுக்கு ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படும். ஒரு நாள் இரவு, அம்மன் கோயிலில் பாடிவிட்டு நாங்கள் வீட்டுக்கு வந்தோம். மணி தோராயமாக 12 முதல் 12 1/2 இருக்கும். மிகவும் சோர்வாக இருந்ததால் உடனே தூங்கச் சென்றோம்; அப்போது திடீரென்று போனில் அழைப்பு வந்தது. எடுத்து பேசினால், யாருமே பதில் கொடுக்க இல்லை. மீண்டும் மீண்டும் அந்த போன் வந்து கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட எட்டாவது முறையாக அந்த போன்கால் வந்த உடன், டென்ஷனான என்னுடைய கணவர் வீட்டின் கீழே சென்று காலர் ஐடியில் என்ன நம்பர் என்று பார்த்துவிட்டு வருகிறேன் என்று சென்றார்.

பாலாம்பிகா
பாலாம்பிகா

அவர் சென்று கொண்டிருக்கும் பொழுது அவருக்கு ஒன்பதாவது முறையாக போன் வந்தது. அந்த அழைப்பில் ஒரு குழந்தை கலகலவென சிரிக்கும் சத்தம் கேட்டது. சரி யாரோ குழந்தையை வைத்து விளையாடுகிறார்கள் என்று சொல்லி நான் படுக்க சென்று விட்டேன். ஆனால் அவர் இரவு படுக்க வரவே இல்லை; சரி ஏதோ வேலையாக இருப்பார் என்று சொல்லி நானும் விட்டுவிட்டேன்.

பாலாம்பிகா செய்த செயல்

அடுத்த நாள் காலை நான் கீழே சென்றேன்; அங்கே அவர் இறுக்கமான முகத்தோடு உட்கார்ந்திருந்தார்; நான் உடனே என்ன ஆயிற்று என்று கேட்டேன். அப்போது அவர் நாம் குழந்தை பார்க்க ஒருவரை நியமித்திருந்தோம் இல்லையா? அவர் இரவு கேஸை ஆஃப் செய்ய மறந்து அப்படியே படுத்து தூங்கிவிட்டாள். வீடு முழுக்க இரவு கேஸ் நிரம்பி இருந்தது. ஒருவேளை நீ வந்திருந்தால் வீட்டின் ஸ்விட்சை போட்டு இருக்க வாய்ப்புண்டு. எனக்கு இந்த வாசம் தெரிந்ததுமே, முதலில் ஜன்னல்கள், கதவுகள் எல்லோவற்றையும் திறந்து அதை வெளியேற்றி விட்டேன்.

ஒருவேளை நாம் பார்க்காமல் வேறு ஏதாவது செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று என்னிடம் கேட்டார். உண்மையில் இது அந்த அம்பாளின் செயல்தான் என்று நான் முழுமையாக நம்புகிறேன். உடனே அடுத்த நாள் புத்தகக்கடைக்கு சென்று குழந்தை வடிவில் இருக்கக்கூடிய கடவுள் யார் என்று கேட்டேன். அப்போது அவர் பாலாம்பிகா புகைப்படத்தை எடுத்துக் காண்பித்தார்; அப்பொழுதே பாலாம்பிகை சிலையையும், போஸ்டரையும் வாங்கி, இன்றுவரை நான் வணங்கிக் கொண்டிருக்கிறேன்’ என்று பேசினார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.