Marriage: கணவன்-மனைவி பிரச்னையில் யாரிடமும் கருத்து கேட்கக்கூடாது.. அனிதா குப்புசாமி தம்பதி பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marriage: கணவன்-மனைவி பிரச்னையில் யாரிடமும் கருத்து கேட்கக்கூடாது.. அனிதா குப்புசாமி தம்பதி பேட்டி

Marriage: கணவன்-மனைவி பிரச்னையில் யாரிடமும் கருத்து கேட்கக்கூடாது.. அனிதா குப்புசாமி தம்பதி பேட்டி

Marimuthu M HT Tamil Published Feb 15, 2025 08:23 AM IST
Marimuthu M HT Tamil
Published Feb 15, 2025 08:23 AM IST

Marriage: 32 வருட திருமண பந்தத்தில் இருக்கும் அனிதா மற்றும் குப்புசாமி தம்பதியினர், தங்கள் வாழ்வின் ஒற்றுமைக்கான காரணத்தை பேட்டியில் கூறியிருக்கின்றனர்.

Marriage: கணவன்-மனைவி பிரச்னையில் யாரிடமும் கருத்து கேட்கக்கூடாது.. அனிதா குப்புசாமி தம்பதி பேட்டி
Marriage: கணவன்-மனைவி பிரச்னையில் யாரிடமும் கருத்து கேட்கக்கூடாது.. அனிதா குப்புசாமி தம்பதி பேட்டி

இதுதொடர்பாக சினி உலகம் யூட்யூப் சேனலுக்கு புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதியினர் அளித்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.

கல்யாணம் ஆகி 32 ஆண்டுகள் காதலோடு ஒரு ஜோடி இருக்காங்க என்றால், இப்போது எல்லாரும் ஆச்சரியப்படுவாங்க. உங்க சீக்ரெட் என்ன?

முதலில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், இப்படி தான் நம்ம பாட்டி, தாத்தா எல்லாம் வாழ்ந்து இருக்காங்க. அது என்னன்னு தெரியல இந்த காலகட்டத்துல எல்லாம் 32 வருஷம் ஒன்றாக இருந்து இருக்கீங்களா, 32 ஆண்டுகள் இதே லவ்வோடு இருக்கீங்களா அப்படின்னு கேட்க ரொம்ப வியப்பாக இருக்கு. ஆனால், நம்ம மூதாதையர்கள் எல்லாம் இப்படித்தான் வாழ்ந்து இருக்காங்க.

இந்த ஜெனரேஷன் எது எடுத்தாலும் டக்கு டக்குனு பிரிஞ்சிரலாம்ன்னு முடிவெடுத்துறாங்க. அது பற்றி?

பொறுமை கிடையாது. காதலுக்கும் அஃபெக்சனுக்குமே வித்தியாசம் இருக்கு. காதல்ன்றது ஒரு விஷயத்தால் வரும். அஃபெக்சன்றது பார்த்தீர்கள் என்றால், அந்த காதல் முத்தி போய்தான் அஃபெக்சன் வரும். இந்த அன்பு, பாசம் எல்லாம் பார்த்தீர்கள் என்றால் காதல் முத்தி போச்சுன்னா தான் வரும். அது வரும் அளவுக்கு போகமாட்டேங்குறாங்க. டக்கு டக்குன்னு ஈகோ கிளாஸ் ஆகுது. ஹர்ட் பண்ணிக்கிறாங்க.

வார்த்தைகள் நிறைய விடுறாங்க. விட்ட வார்த்தைகளை அள்ள முடியாது. ஒவ்வொரு வீட்லேயும் நீயா நானா ஷோ நடக்குது. கிராமத்தில் சொல்வாங்க, ’விட்டுக்கொடுப்பார் கெட்டுப்போகார்’; ’குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’.. கல்யாணம் ஆகி வயசாக ஆக புரிதல் கூடும். இதுக்கு ஒன்னு அழகா உதாரணம் சொல்லுவாரு. இவரு வயசான பாட்டி தோல் எல்லாம் சுருங்கி போயிருக்கும். அவருக்கும் தாத்தாவுக்கும் புரிதல் அதிகமாக இருக்கும்.

இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்து வளர வளர எல்லாமே சரியாயிடும். ஒரு புரிதலும் வரும். பிரச்னைகள் கூட சரியாயிடும். ஆனால், அந்த குழந்தை பிறக்கிற வரைக்கும் கூட யாருக்கும் பொறுமை இல்லை.

குடும்பத்துக்குள் மூன்றாவது ஆள் நுழையக்கூடாது: புஷ்பவனம் குப்புசாமி தம்பதியினர்

பொறுமை இல்லை என்பதை விட புரிதல் இல்லை. புரிதல் இருந்தால் பொறுமை தானாக வரும். இப்ப பெரும்பாலும் பார்த்தீர்கள் என்றால், கணவன் தனி அக்கவுண்ட், மனைவி தனி அக்கவுண்ட் வைச்சுக்கிறாங்க. அப்போது எல்லாம் பார்த்தீர்கள் என்றால், ஒரே ஒரு வங்கிக்கணக்கு தான் வைச்சிருப்பாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் ஒளிவு மறைவு இல்லாமல் வாழ்ந்துகிட்டு இருந்தாங்க. ஆனால், இப்போது அது எல்லாமே மைனஸ்.

குடும்பத்துக்குள் மூன்றாவது ஆள் நுழையக்கூடாது. அது ரொம்ப முக்கியம். இப்போது மூன்றாவது ஆளாக, மொபைல் வந்திடுது. கணவன் - மனைவிக்குள்ள பிரச்னை என்றால் அவங்களே பார்த்துக்கணும். யாராவது ஒருத்தர்கிட்ட போய் கருத்து கேட்குறது. அவங்க பிரச்னைக்கு தீர்வு கொடுக்கிறேன் என்கிற பேர் வழியில கும்மி கொட்டிட்டு போயிருவாங்க.

அப்போது முதியவர்கள் தீர்வு சொல்வாங்க: புஷ்பவனம் குப்புசாமி தம்பதியினர்

முன்பு ஒரு தம்பதிக்கு உள்ள பிரச்னை வர்றப்போ வயதானவங்க வந்து, அவங்களுடைய அனுபவத்தைச் சொல்லி அவங்க ரெண்டையும் சேர்த்து வச்சிருவாங்க. அந்த சேர்த்து வைக்கிறதுக்கு சில யுக்திகளை கையாளுவாங்க. இப்போது என்ன செய்றோம் என்றால், இளம் வயதினர், அந்த முதியவர்களை மதிக்கிறதே இல்லை. அவர்களை தள்ளி வைச்சிடுறாங்க. உங்க யோசனை எங்களுக்கு தேவையில்லை அவங்களுக்கு வயசாகிடுச்சு சுத்த கர்நாடகம்ன்னு சொல்றாங்க.

அந்த காலம் மாறி இந்த காலம் இல்ல.. அப்படி எல்லாம் கிடையாது. கிழக்கில் தான் சூரியன் எப்பவுமே உதிச்சிட்டு இருக்கு. நாம் தான் மனிதர்கள் மாறிக்கிட்டே இருக்கிறோம். எந்த காலம் வந்தாலும் பொண்ணுதான் பிள்ளை பெக்கணும். அது மாறப்போறது இல்ல. மாத்த முடியாது. எப்போது பெரியவங்களை மதிக்காத நிலை வந்ததோ அப்பவே பிரச்னை உருவாயிடுச்சு. பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறது இல்லை. அவங்க சுலபமாக தீர்த்து வைச்சிருவாங்க’’ எனப் பேசினர், புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதியினர்.

நன்றி: சினி உலகம் யூட்யூப் சேனல், அனிதா மற்றும் புஷ்பவனம் குப்புசாமி தம்பதியினர்!

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.