Animal Movie OTT: தீர்ந்தது பெரிய பஞ்சாயத்து.. அனிமல் பட ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
அனிமல் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

அனிமல்
அனிமல் திரைப்படம் திரையரங்குகளில் பாக்ஸ் ஆபிஸில் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது.
அனிமல் திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி இந்திய அளவில் ஒரு வன்முறை ஆக்ஷன் த்ரில்லராக வெளியிடப்பட்டது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இப்படம் வணிக ரீதியாக விமர்சிக்கப்பட்டாலும் முழு வெற்றி பெற்றது. அனிமேல் திரைப்படம் ஓடிடி ஸ்ட்ரீமிங்கிற்காக பலர் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனிமல் திரைப்படம் தொடர்பான வழக்கில் தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை டி சீரிஸ் நிறுவனம் செலுத்தவில்லை என்று சினி1 ஸ்டுடியோஸ் சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.