Anil Kumar: ‘ அஜித்துக்கு வாழ்த்து.. என்னால முடிஞ்சத நான் பண்ணியிருக்கேன்..முடிஞ்சா நீங்களும் நாய்களுக்கு’ - அஜித் தம்பி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anil Kumar: ‘ அஜித்துக்கு வாழ்த்து.. என்னால முடிஞ்சத நான் பண்ணியிருக்கேன்..முடிஞ்சா நீங்களும் நாய்களுக்கு’ - அஜித் தம்பி

Anil Kumar: ‘ அஜித்துக்கு வாழ்த்து.. என்னால முடிஞ்சத நான் பண்ணியிருக்கேன்..முடிஞ்சா நீங்களும் நாய்களுக்கு’ - அஜித் தம்பி

Kalyani Pandiyan S HT Tamil
Feb 02, 2025 12:42 PM IST

Anil Kumar: ‘நிறைய பேர் தெரு நாய்களை பார்த்து பயப்படுவார்கள் கற்களை தூக்கி அதன் மீது எறிவார்கள். கம்பை கொண்டு துரத்துவார்கள். அப்படி நான் செய்யும் பட்சத்தில், அவர்களுக்கு பயம் வந்து விடும். அப்படி இருக்கும் பட்சத்தில், அவர்கள் நம்மை கடிக்க வந்து விடுவார்கள்.’ - அஜித் தம்பி

Anil Kumar: ‘ அஜித்துக்கு வாழ்த்து.. என்னால முடிஞ்சத நான் பண்ணியிருக்கேன்..முடிஞ்சா நீங்களும் நாய்களுக்கு’ - அஜித் தம்பி
Anil Kumar: ‘ அஜித்துக்கு வாழ்த்து.. என்னால முடிஞ்சத நான் பண்ணியிருக்கேன்..முடிஞ்சா நீங்களும் நாய்களுக்கு’ - அஜித் தம்பி

வீட்டிற்கு வந்த நாய்

நான் உண்மையில் இது போன்றதொரு நிகழ்ச்சிக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னதாக, வீட்டில் எந்த ஒரு பிராணிகளையும் நாங்கள் வளர்க்கவில்லை. ஆனால் 2021 தீபாவளி தினத்தில், எங்கள் வீட்டிற்கு நாய் ஒன்று வந்தது. எங்கிருந்து அந்த நாய் வந்தது என்றே தெரியவில்லை.

இந்த நாயை அழைத்துச் செல்வதற்கு யாராவது வருவார்களா என்று நாங்கள் பார்த்தோம்; ஆனால் யாரும் வரவில்லை; அவன் என்னுடனே செட் ஆகிவிட்டான். அவன் பெயர் பிட்டு. விலங்குகள் மனிதனுக்கு எவ்வளவு அன்பையும், உண்மையையும் கொடுக்கிறது. என்னுடைய வீட்டில் அந்த நாய் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் அடிக்கடி இதைச் சொல்வதுண்டு; உண்மையில் அவனை நான் சேர்த்துக் கொள்ளவில்லை; என்னை தான் அவன் சேர்த்துக் கொண்டான்.

தெரு நாய்களை அடிக்காதீர்கள்

நிறைய பேர் தெரு நாய்களை பார்த்து பயப்படுவார்கள் கற்களை தூக்கி அதன் மீது எறிவார்கள். கம்பை கொண்டு துரத்துவார்கள். அப்படி நான் செய்யும் பட்சத்தில், அவர்களுக்கு பயம் வந்து விடும். அப்படி இருக்கும் பட்சத்தில், அவர்கள் நம்மை கடிக்க வந்து விடுவார்கள். நான் நாயை பற்றி நிறைய படித்து இருக்கிறேன்.

வாழு வாழ விடு

முதலில் அவர்களை வாசம் செய்து கொள்ள அனுமதியுங்கள்; அவர்களுள் ஒரு கட்டத்தில் செட்டில் ஆகிவிடுவார்கள். அதன்பின்னர் அவர்களுக்கு பயம் சென்று விடும். உங்களுக்கும் பயம் இருக்காது. நிறைய பேர் தெரு நாய்களுக்கு சாப்பாடு கொடுக்கிறார்கள். என்னால் முடிந்தது நான் ஒரு நாய்க்கு என் வீட்டில் இடம் கொடுத்து இருக்கிறேன். என்னால் இதை கொடுக்க முடியும் என்றால், உங்களாலும் செய்ய முடியும்.

வாழு வாழ விடு என்று நான் அடிக்கடி சொல்வேன் விலங்குகளிடம் மிகவும் பரிவாக நடந்து கொள்ளுங்கள்;அஜித்திற்கு பத்மபூஷன் விருது கிடைத்ததில் மிகவும் சந்தோஷம், அவருக்கு நாங்கள் எங்களது வாழ்த்துகளை தெரிவித்தோம்’ என்று பேசினார்.

கலை, சமூகப் பணி, மருத்துவம், கல்வி, விளையாட்டு, அறிவியல் என பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.

அந்த வகையில், அஜித்குமார் உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் இருவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை பிரிவில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய அஜித்குமாருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.