சினிமாவ தாண்டி வெளிய வாங்க.. மருமகன் குறித்த கேள்வியால் எரிச்சலான பவன் கல்யான்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சினிமாவ தாண்டி வெளிய வாங்க.. மருமகன் குறித்த கேள்வியால் எரிச்சலான பவன் கல்யான்..

சினிமாவ தாண்டி வெளிய வாங்க.. மருமகன் குறித்த கேள்வியால் எரிச்சலான பவன் கல்யான்..

Malavica Natarajan HT Tamil
Dec 29, 2024 02:10 PM IST

அல்லு அர்ஜூன் குறித்து பவன் கல்யாணிடம் கேள்வி எழுப்பப்பட்டதால் அவர் சினிமாவைத் தாண்டி வெளியே வாங்க என பத்திரிகையாளர்களிடம் எரிச்சலாக பேசியுள்ளார்.

சினிமாவ தாண்டி வெளிய வாங்க.. மருமகன் குறித்த கேள்வியால் எரிச்சலான பவன் கல்யான்..
சினிமாவ தாண்டி வெளிய வாங்க.. மருமகன் குறித்த கேள்வியால் எரிச்சலான பவன் கல்யான்..

கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க

பின், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடப்பாவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து விரிவாக பேசினார். அப்போது ஒரு பத்திரிகைகாரர் பவன் கல்யாணிடம் அவரது மருமகனான அல்லு அர்ஜூன் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் எரிச்சலடைந்தார்.

அப்போது அவர் அல்லு அர்ஜூன் குறித்த கேள்விகள் இங்கு பொருத்தமற்றது. இங்கே நான் மக்கள் இறப்பதைப் பற்றி பேசுகிறேன். ஆனால், நீங்கள் சினிமாவைப் பற்றி கேட்கிறீர்கள். கொஞ்சம் பெரிய மனசு கொடுங்க ப்ளீஸ் எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

விடாத பத்திரிகையாளர்கள்

ஆனால், அல்லு அர்ஜுன் பவன் கல்யாணிண் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் பத்திரிகையாளர்களும் விடாப்பிடியாக பவன் கல்யாணிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். இதனால் கடுப்பான பவன் கல்யாண், திரும்ப வந்து, உங்கள் விவாதம் சினிமாவைத் தாண்டி கொஞ்சமாவது செல்லட்டும். நான் நேர்மையாக இருக்கிறேன். நம் மாநிலத்தில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி பேசலாம். சினிமா ரொம்ப சின்ன விஷயம் எனக் கூறினார்.

அல்லு அர்ஜூன் விவகாரம்

புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் ஷோவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அர்ஜுன் டிசம்பர் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த மோதலில் ஒரு சிறுவனும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த விவகாரத்தில் தெலங்கானா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அர்ஜுன் தற்போது வெளியே வந்துள்ளார்.

சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜூனை அவரது குடும்பத்தினரும், நண்பர்களும், சினிமாத் துறையினரும், ரசிகர்களும் காணக் குவிந்தனர். ஆனால், இந்த விவகாரம் நடந்ததிலிருந்து பவன் கல்யாண் தனது மருமகனை பொது வெளியில் சந்திக்கவில்லை எனத் தெரிகிறது.

ரசிகர்களை கண்டித்த பவன்

முன்னதாக, பவன் கல்யாண் கடப்பா தாக்குதல் குறித்து பத்திரிகையாளர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தபோது அவரது ரசிகர்கள் அந்த இடத்திலேயே திரண்டனர். அவர்கள் தொடர்ந்து 'ஓஜி' என்று கோஷமிடத் தொடங்கியபோது, பவன் அவர்களை இடைமறித்து கோபத்துடன் அவர்களை நோக்கி விரலை அசைத்தார். மேலும் அவர், "உங்களுக்கு என்ன நேர்ந்தது? எங்கே என்ன கோஷம் கொடுக்க வேண்டும் என்று தெரியாதா? ஒதுங்கி நில்லுங்கள்" என்றார்.

பிஸியான பவன்

ஆந்திர சட்டசபை தேர்தலில் களமிறங்கிய பவன் கல்யாணம் தான் பிரசாரம் செய்வதற்கு முன்பு சில படங்களில் நடிக்க கால்ஷீட் அளித்திருந்தார். ஆனால் அந்தப் படங்கள் இன்னும் முடிக்கப் படவில்லை. காரணம் அவர் தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திராவின் துணை முதல்வரானார். இதனால் அவர் முன்பை விட பிஸியாக மாறினார். மேலும் அவரது பணி அவரை மாநிலத்தின் கிராமப்புறங்களுக்கு அழைத்துச் சென்றது.

பவன் கல்யாண் வசம் உள்ள படங்கள்

இருப்பினும் பவன் கல்யாண் சமீபத்தில், கிரிஷ் ஜகர்லமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணாவின் வரலாற்று அதிரடி-சாகசமான ஹரி ஹர வீர மல்லு படத்திற்காக சில காட்சிகளை படமாக்கினார். சாஹோ புகழ் இயக்குனர் சுஜீத்துடன் தே கால் ஹிம் ஓஜி படத்திலும் பணியாற்றி வருகிறார். தெறி படத்தின் தெலுங்கு தழுவலான ஹரிஷ் ஷங்கரின் உஸ்தாத் பகத் சிங் படத்திலும் நடிக்க அவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.