Dhivyadharshini: ‘இரண்டாவதா கூட கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்.. டிடி மீது எனக்கு இருந்த காதல்..ஆனா அவங்க..’ - ரமேஷ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhivyadharshini: ‘இரண்டாவதா கூட கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்.. டிடி மீது எனக்கு இருந்த காதல்..ஆனா அவங்க..’ - ரமேஷ்

Dhivyadharshini: ‘இரண்டாவதா கூட கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்.. டிடி மீது எனக்கு இருந்த காதல்..ஆனா அவங்க..’ - ரமேஷ்

Kalyani Pandiyan S HT Tamil
Published Jul 22, 2024 07:00 AM IST

Dhivyadharshini: உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு அவர் மீது காதல் இருந்தது. இதை அவரிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற யோசனையிலேயே, பல நாட்கள் கழிந்தன. - ரமேஷ்

Dhivyadharshini: ‘இரண்டாவதா கூட கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்.. டிடி மீது எனக்கு இருந்த காதல்..ஆனா அவங்க..’ - ரமேஷ்
Dhivyadharshini: ‘இரண்டாவதா கூட கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்.. டிடி மீது எனக்கு இருந்த காதல்..ஆனா அவங்க..’ - ரமேஷ்

டிடி மீது இருந்த காதல் 

இது குறித்து அவர் பேசும் போது, “தொகுப்பாளர்களில் எனக்கு சிவகார்த்திகேயன், டிடி போன்றவர்கள் மிகவும் பிடிக்கும். அவர்களது பேச்சு, கணநேரத்தில் அவர்கள் வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகள் உள்ளிட்டவை, ஒரு தொகுப்பாளராக எனக்கு முன்மாதிரியாக இருந்திருக்கின்றன. குறிப்பாக டிடி, நிகழ்ச்சியில் எந்தவிதமான குளறுபடிகள் நடந்தாலும், அதனை உடனடியாக சரி செய்து, அந்த நிகழ்ச்சியை சுமூகமாக கொண்டு செல்வார். 

அவர் விருந்தினர்களிடம் நடந்து கொள்ளும் முறை, கேட்கும் கேள்விகள் அனைத்துமே அந்த விருந்தினரை எந்த விதத்திலும் காயப்படுத்தாமல் இருக்கும். அப்படியே அது விருந்தினரை காயப்படுத்தக்கூடிய கேள்வியாக இருந்தாலும், அதை எப்படி கேட்க வேண்டுமோ, அந்த வகையில் கேட்டு, அவர் பதில் வாங்கக்கூடிய விதம் எனக்கு மிக மிக பிடிக்கும். எனக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் நிறைய தெரிந்த நண்பர்கள் இருந்தார்கள். 

காதலை வெளிப்படுத்திய போது நடந்த விபரீதம் 

அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் என்னுடைய நண்பர்தான். இதையடுத்து, நான் அங்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அங்கு தான் முதன்முறையாக நான் டிடியை பார்த்தேன். அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குள் அவ்வளவு சந்தோஷம் ஏற்பட்டது. காரணம் என்னவென்றால், அவரை எனக்கு மிக மிகப் பிடிக்கும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு அவர் மீது காதல் இருந்தது. இதை அவரிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற யோசனையிலேயே, பல நாட்கள் கழிந்தன. 

இதை அவரிடம் சொல்லும் பட்சத்தில், அதை அவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்ற கேள்வி எனக்குள் இருந்தது. காரணம் என்னவென்றால், அவர் ஒரு பிரபலமான தொகுப்பாளினி. நான் சொல்வதை அவர் இலகுவாக எடுத்துக்கொள்வாரா அல்லது தவறாக எடுத்துக்கொள்வாரா என்ற கேள்வி எனக்குள் இருந்தது. ஆனால் ஒரு நாள் ஜோடி செட்டில் இருக்கும் போது, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவரிடம் என்னுடைய மனதில் இருப்பதை சொல்வதற்கு ரெடியானேன்.  சொல்வதற்கு முன்னால் அங்கு இருந்த தயாரிப்பாளர், டிடியின் திருமண நிச்சயம் குறித்தான அறிவிப்பை வெளியிட்டார். எனக்கு அப்படியே ஷாக் ஆகிவிட்டது. ஒரு நல்ல பெண்ணை இப்படி மிஸ் செய்து விட்டோமே என்று வருத்தப்பட்டேன். 

அதன் பின்னர் அவருக்கு கல்யாணம் ஆனது. இதற்கிடையே அவருக்கு திடீரென்று விவாகரத்தானது. அது என்னை மிகவும் கஷ்டப்பட வைத்தது. இதையடுத்து மீண்டும் அவர் மறுமணத்திற்கு தயாராக இருக்கிறாரா என்பது குறித்து தெரிந்து கொள்ள, காபி வித் காதல் படப்பிடிப்பில் அவர் இருந்தபோது, தொலைபேசியில் பேசினேன். ஆனால் அதைப்பற்றி பேசவே அவர் தயாராக இல்லை” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.