ஆபிஸுக்கு வரும் ஆனந்தி.. கடுப்பான கருணாகரன்.. மகேஷ் போட்ட அதிரடி உத்தரவு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
ஆபிஸுக்கு வரும் ஆனந்தி.. கடுப்பான கருணாகரன்.. மகேஷ் போட்ட அதிரடி உத்தரவு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட் குறித்துப் பார்ப்போம்.
சன் டிவியில் இரவு 9 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகும் சீரியல் சிங்கப்பெண்ணே. அதில் நவம்பர் 28ஆம் தேதிக்குண்டான எபிசோடு புரோமோ வெளியாகியுள்ளது.
இன்றைய நாளுக்குண்டான புரோமோ:
சிங்கப்பெண்ணே சீரியலில் இன்றைய நாளுக்கான புரோமோவில் அன்புவும் ஆனந்தியும், தங்களது பழைய கார்மென்ட்ஸ் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களைப் பார்த்து ஷாக் ஆகிறார், மேல் அதிகாரி கருணாகரன். மேலும், ’உங்களைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிடுவேன்’ என்றும்; ’அப்போது தான் நீங்கள் வெளியில் போவீர்கள்’ எனச் சொல்கிறார்.
உடனே, அன்பு, ‘என்ன சார் நேற்று வாங்கியது மறந்துபோயிடுச்சா’ எனக் கேட்கிறார். அந்த வார்த்தையைக் கேட்டதும் அருகில் இருக்கும் சகப்பணியாளர்கள் சிரிக்கின்றனர். மேலும் கருணாகரன் கையில் கட்டு போடப்பட்டு இருப்பது வெளியில் நன்கு தெரிகிறது.
மறுபுறம் கிராமத்தில் ஆனந்தியின் தந்தை 48 நாளுக்குள் நல்லது நடக்கவில்லை என்றால் பெரிய அவமானம் வரும் என்று குடுகுடுப்பைக்காரன் சொல்லிவிட்டுப்போனதை தனது மனைவியிடம் வேதனையுடன் சொல்கிறார்.
அடுத்து கட் செய்து ஆபிஸுக்கு வந்தால், கருணாகரன், அன்பு, முதலாளி மகேஷ், ஆனந்தி என அனைவரும் ஒன்றாக நின்றுகொண்டு இருக்கின்றனர். அப்போது மேல் அதிகாரி கருணாகரன், ‘அன்பும் ஆனந்தியும் இங்கு இருந்தால் நான் இங்கு இருக்கமாட்டேன்’எனச் சொல்கிறார், முதலாளி மகேஷிடம். உடனே, முதலாளி மகேஷ், ‘அப்படியென்றால் வேலையைவிட்டுப் போகலாம்’என்கிறார். இது கருணாகரனுக்கு மட்டுமல்ல, மித்ராவுக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. இத்தகைய சூழலில் அன்பு மற்றும் ஆனந்தியின் காதலுக்கு மகேஷ் உதவுவாரா அல்லது பழிவாங்குவாரா என்ற எதிர்பார்ப்புகளை இன்றைய சிங்கப்பெண்ணே சீரியல் புரோமோ ஏற்படுத்துகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
முந்தைய எபிசோட்:
அன்பு தான் அழகன் என்பதை தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களுக்கும் ஹாஸ்டல் நண்பர்களுக்கும் கூற வேண்டும் என்று ஆசைப்பட்ட ஆனந்தி அனைவரையும் ஹோட்டல் ஒன்றிற்கு வருமாறு கூறினாள்.
மகேஷை கோபப்படுத்திய ரெஜினா
இதைக்கேட்டு ஷாக்கான காயத்ரியும், ரெஜினாவும் ஆனந்தி அழகனை கண்டுபிடித்துவிட்டதாகவும், அவனைக் காண நீங்களும் வருமாரும் மகேஷிடம் கேட்டுள்ளனர்.
அழகன் தன் வாழ்வில் திரும்பத் திரும்ப வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத மகேஷ் கோபமடைகிறான். அத்துடன் ரெஜினாவிடம் முதலில் நீங்கள் அழகன் யார் என்பதைப் பார்த்துவிட்டு, பின் என்னிடம் சொல்லுங்கள் எனக் கூறினான்.
மகேஷை தடுக்கும் ரெஜினா
இதற்கிடையில், அன்பு தான் அழகன் என்பதை அறிந்த ரெஜினாவும் காயத்ரியும் மகேஷ் ஹோட்டலுக்கு வருவதைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்கின்றனர். ஆனால், மகேஷ் அவர்களை விடுவதாக இல்லை. ஆனந்தியை சந்திக்க வேண்டும் என முயற்சி செய்கிறான்.
மித்ராவின் திருகுவேலை, அன்பு ஆனந்தி காதலை அறிந்துகொண்ட மகேஷ்:
அப்போது, அங்கு வரும் மகேஷும் மித்ராவும் அன்புவும் ஆனந்தியும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கின்றனர். மேலும், மித்ரா மகேஷை ஏற்றி விடுகிறாள். அன்பு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். அதனால் அவரை அடிக்கவும் செல்கிறார், மித்ரா.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த மகேஷ், மித்ராவை பளார் என அறைகிறான். நடப்பது புரியாமல் தவித்த மித்ராவிடம் அழகன் பெயரில் பார்சல் அனுப்பி, ஆனந்தியையும் மகேஷையும் பிரிக்க அன்பு கையெழுத்திலேயே கடிதம் எழுதியது மித்ரா தான் என்ற உண்மை தனக்கு தெரியும் என்றும், நீயும் என் அம்மாவும் பேசியதை தான் கேட்டதாகவும் கூறி, இனி மித்ராவை தன் கண்முன்னே இருக்க கூடாது எனவும் திட்டுகிறான்.
டாபிக்ஸ்