தமிழ் செய்திகள்  /  Entertainment  /  An Intense Battle Is Fought On Sea Land And Air Singer Rihana Acted In This Hollywood Movie

HT OTT SPL: பிரபல ஹிப்-ஹாப் பாடகி ரிஹானா நடித்த அறிவியல் புனைகதை படம்!

Manigandan K T HT Tamil
Feb 07, 2024 06:50 AM IST

இந்த ஜானரில் முதல்முறையாக படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் பிடிக்க வாய்ப்புள்ளது.

பாடகி ரிஹானா நடித்த பேட்டில்ஷிப் படத்தின் காட்சி
பாடகி ரிஹானா நடித்த பேட்டில்ஷிப் படத்தின் காட்சி (HT)

ட்ரெண்டிங் செய்திகள்

வேற்று கிரகத்தில் வந்த மிகப் பெரிய கூட்டத்தை தீர்த்துக் கட்டும் அமெரிக்க ராணுவக் கப்பல் பற்றிய கதை.

யுனைடெட் ஸ்டேட்ஸில் யுனிவர்சல் பிக்சர்ஸால் மே 18, 2012 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் படம் பொதுவாக எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

கதை என்ன?

2012 RIMPAC பயிற்சியின் போது, ஐந்து வேற்றுலக விண்கலங்கள் வந்தடைகின்றன. யாரும் கிட்டே நெருங்க முடியாத ஒரு வளையத்தை போட்டுக் கொள்கிறது. ஆனால், இளம் அமெரிக்க கடற்படை வீரர் உள்ளிட்டோர் குழுக்கள் வேற்று கிரக வாசிகளை எதிர்கொள்கின்றனர்.

அதில் அவர்கள் வெற்றி கண்டார்களா என்பதே படம். பரபர திரைக்கதை இல்லாதது பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இதுபாேன்று பல படங்கள் ஹாலிவுட்டில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதே ஜானரில் வந்திருக்கிறது. ஆனால், புதிதாக ஒன்றுமில்லை. இந்த ஜானரில் முதல்முறையாக படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் பிடிக்க வாய்ப்புள்ளது.

கிராபிக்ஸ், விஎஃப்எக்ஸ் காட்சிகள் படத்தை நல்ல தரத்திற்கு உயர்த்தியிருக்கின்றன. பிரபல பாடகி ரிஹானா கடற்படை வீராங்கனை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜாலியான கதாபாத்திரமாக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Taylor Kitsch என்ற கனடா நடிகர் ஹீரோவாக நடித்திருக்கிறார். Brooklyn Decker கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜாலியாக ஒரு ஏலியன் படம் பார்க்க விரும்பினால், இந்தப் படத்தை நீங்கள் கண்டு ரசிக்கலாம். படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.

அமேசான் பிரைமில்..

க்ளீனர் என்பது ரென்னி ஹார்லின் இயக்கிய 2007 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரில்லர் திரைப்படமாகும். இதில் சாமுவேல் எல். ஜாக்சன் க்ரைம் ஸ்பாட்டை சுத்தம் செய்யும் தொழிலை செய்பவராக நடித்திருக்கிறார். எட் ஹாரிஸ், கேக் பால்மர் மற்றும் ஈவா மென்டிஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். படம் மே 27, 2007 அன்று ரிலீஸ் ஆனது.

தாயை இழந்த மகளுக்கு தந்தையும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியுமான டாம் கட்லர் (சாமுவேல் ஜாக்சன்) குற்றச் சம்பவ இடத்தை சுத்தம் செய்யும் தொழிலை செய்து வருகிறார். ஒரு கொள்ளையின் போது இவரது மனைவி கொலை செய்யப்பட்டிருப்பார். அதை அவர்களின் இளம் மகள் ரோஸ் கண்டு மனதளவில் தனியாக இருப்பதை விரும்பாதவராக இருப்பார்.

ஒரு பணக்கார நபரின் வீட்டில் க்ரைம் நடந்திருப்பதாகவும் அதை சுத்தம் செய்து தருமாறும் டாம் ஆர்டரைப் பெறுகிறார். அடுத்த நாள் அந்த வீட்டில் இருந்தவர் காணாமல் போனதும், அங்க நடந்த க்ரைம் போலீஸுக்கு தெரியாமல் இருப்பதும் பின்னர் டாமுக்கு தெரியவருகிறது.

அதேநேரம், அந்த வீட்டில் உள்ள பெண் தனது கணவரை காணவில்லை என்கிறார். இதனால், போலீஸ் விசாரணையைத் தொடங்குகிறது. அந்த வீட்டில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது டாமுக்கு மட்டுமே தெரிகிறது. அவர் என்ன செய்தார், கொலையாளியை கண்டுபிடித்தாரா? அவரது மனைவி என்ன செய்தார்? என்பது படத்தின் பரபர திரைக்கதை.

ராஜேஷ் குமார் நாவலை படிப்பது போன்ற விறுவிறுப்பு இந்தப் படத்தை பார்க்கும்போது உங்கள் நிச்சயம் ஏற்படும்.

அமேசான் பிரைமில் இந்தப் படம் காணக் கிடைக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.