13 Years Of Deiva Thirumagal: குழந்தையுள்ளம் கொண்டவருக்கு தாய்போல் பாசம் காட்டும் மகளின் கதை 'தெய்வத் திருமகள்’
13 Years Of Deiva Thirumagal: குழந்தையுள்ளம் கொண்டவருக்கு தாய்போல் பாசம் காட்டும் மகளின் கதை 'தெய்வத் திருமகள்’. இப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

13 Years Of Deiva Thirumagal: விக்ரம், அனுஷ்கா, அமலா பால், நாசர், சந்தானம், சாரா ஆகியோர் நடிக்க, இயக்குநர் விஜய் எழுதி இயக்கி ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் செய்த படம், தெய்வத் திருமகள். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்து இருந்தார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆண்டனி எடிட்டிங்கினை மேற்கொண்டிருந்தார். யூடிவி மோஷன் பிக்ஸர்ஸ் மற்றும் ஸ்ரீ ராஜகாளியம்மன் மீடியாஸ் இணைந்து 24 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் 40 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனைப் படைத்தது.
தெய்வத்திருமகள் படத்தின் கதை:
குழந்தையுள்ளம் கொண்டவருக்கு தாய்போல் பாசம் காட்டும் மகளின் கதை தான், 'தெய்வத் திருமகள்’. படத்தின்படி, 7 வயதுடைய குழந்தையின் மனநிலையில் இருக்கிறார் கதையின் நாயகன், கிருஷ்ணா. இவர் விக்டருடைய சாக்லேட் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அப்போது ஒருநாள் கிருஷ்ணாவுக்கு அவரது காதல் மனைவி பானுமதி மூலம் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பானுமதி இறந்துவிடுகிறாள். அதைப் புரிந்துகொள்ள முடியாத கிருஷ்ணா, பானுமதி கடவுளிடம் சென்றுவிட்டதாக நம்புகிறார்.
பின் தன் மகளுக்கு நிலா என்று பெயர் வைத்து வளர்க்கிறார். சாக்லேட் நிறுவன உரிமையாளர் விக்டர், அவரை நன்கு பரமாரித்துக்கொள்கிறார்.