6 Years of Nachiyar: சிறார் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவரை மீட்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை!
நாச்சியார் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
இயக்குநர் பாலாவின் இயக்கத்தில், ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா ஆகியோர் நடித்து 2018ஆம் ஆண்டு, பிப்ரவரி 16ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் தான், நாச்சியார். இப்படத்துக்குண்டான இசையை இசைஞானி இளையராஜாவும், ஒளிப்பதிவினை தேனி ஈஸ்வரும் செய்தனர். பொதுவாகவே, பாலாவின் படங்கள் என்றால் எடுக்க இரண்டு, மூன்று வருடங்கள் ஆகும் எனும் கட்டமைப்பை உடைத்து மார்ச் 2017ல் சூட் தொடங்கி, 2018ல் இப்படம் ரிலீஸாகியிருக்கிறது. மேலும் இது வணிகரீதியிலான வெற்றிப் படமாகும். இப்படத்தைப் பாலாவே தயாரித்து இருந்தார்.
நாச்சியார் படத்தின் கதை என்ன? சென்னையில் காவல் உதவி ஆணையாராகப் பணிபுரியும் நேர்மையான அதிகாரி, நாச்சியார். பதின்ம வயதில் நடக்கும் பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரித்து வருகிறார். இந்நிலையில் தனது மாமா மற்றும் ரவுடிகள் சிலரால் துரத்தப்படும் 8 மாத கர்ப்பிணி என்னும் அரசியைப் பார்க்கிறார், நாச்சியார். அதனால், அரசியை தனது கஷ்டடியில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கிறார், நாச்சியார்.
பின், ஃபெரோஸ் என்னும் காவல் அலுவலர், அரசியின் துணைவர் காத்து என்பவரைக் கைது செய்து, சிறார் சீர்திருத்த இல்லத்துக்கு அனுப்புகிறார். அதனையடுத்து காத்து அங்கு இருக்கும் ஒரு அலுவலரிடம் தன் கதையைச் சொல்கிறார்.
மிகவும் பின் தங்கிய குடிசைப் பகுதியில் வாழ்ந்துவரும் பகுதியைச் சார்ந்த காத்துவும், அரசியும் குடும்ப சூழ்நிலைகளுக்காக பதின்ம வயதில் வேலைக்குச் செல்கின்றனர். அரசி, பணக்கார இல்லங்களில் வேலைக்காரப்பெண்ணாகவும், காத்து கிடைக்கிற வேலைகளையும் செய்து வருகின்றனர். அதன்பின், அரசியும் காத்துவும் இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் காதலில் நெருக்கமாக இருக்கின்றனர். அரசி பின்னர் வருத்தப்படுகிறார். காத்து அவ்விடத்தில் இருந்து கிளம்பிப்போய்விடுகிறார்.
அப்படியே கட் செய்தால், அக்கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. அரசி, ஆண்குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அரசு அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான இடம் வழங்கும் வரை, அரசியையும் அவரது குழந்தையையும் பாதுகாப்பாக வைக்க ஆசைப்படுகிறார், நாச்சியார். பின், டிஎன்ஏ முடிவுகள் மூலம், காத்து அரசியின் குழந்தைக்கு அப்பா இல்லை எனும் தகவல் தெரியவருகிறது, நாச்சியருக்கு. பின், இதை அவர் யாரிடமும் சொல்லாமல் விசாரிக்கத் தொடங்குகிறார்.
பின் காவல் அலுவலர் பெரோஸ், அரசியின் மாமாவை கைது செய்கிறார். அவர் மூலம் கருக்கலைப்பில் ஈடுபட முயன்ற போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். பின், போலி மருத்துவர், அரசியைப் பாலியல் வன்புணர்வு செய்தது பெரும் பணக்காரர் தங்கமணி பிரபு என வாக்குமூலம் அளிக்கிறார். அப்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய தங்கமணிபிரபு முயன்றபோது, அப்பெண்மணிக்கு ஒன்றும் இல்லை என போலி டாக்டர் பொய் சொல்லி, அவள் கர்ப்பிணி ஆன பின், தங்கமணி பிரபுவிடம் பணம் பறிக்க, போலி டாக்டர் திட்டம் தீட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து நாச்சியார், அந்த பெரும் பணக்காரரை உரிய ஆவணங்களுடன் கைது செய்கிறார். அவரை விடுவிக்கப் பல இடங்களிலும் இருந்து அழுத்தம் வருகிறது. ஆனால், அவர் அதை கண்டுகொள்ளமால் நடவடிக்கை எடுக்கிறார். இதனால் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகி பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்.
அதன்பின், காத்துவையும் அரசியையும் சேர்த்து வைக்க நாச்சியார் விரும்புகிறார். மேலும், அரசியின் கணவர் காத்துவிடம் மட்டும், அக்குழந்தையின் அப்பா குறித்த உண்மையைச் சொல்கிறார். ஆனால், அரசியிடம் சொல்லவில்லை. உடனே, காத்து, இதனை அரசியிடம் சொல்லவேண்டாம் என்று காத்து நாச்சியாரிடம் கேட்டுக்கொள்கிறார். இறுதியாக காத்து அக்குழந்தையைத் தன் குழந்தையாக ஏற்று,மனைவி அரசியுடன் பேருந்தில் செல்கிறார்.
படம் வெளியாகி 6 ஆண்டுகளை நிறைவுசெய்தாலும் படம் தரமானதாக எடுக்கப்பட்டிருப்பதால், சினிமா ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்