தமன்னாவின் புது அவதாரம்.. அமானுஷ்ய படத்தில் சிவதுறவியாக களமிறங்கிய தமன்னா.. திகில் கிளப்பும் ஒடேலா 2 டீசர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தமன்னாவின் புது அவதாரம்.. அமானுஷ்ய படத்தில் சிவதுறவியாக களமிறங்கிய தமன்னா.. திகில் கிளப்பும் ஒடேலா 2 டீசர்

தமன்னாவின் புது அவதாரம்.. அமானுஷ்ய படத்தில் சிவதுறவியாக களமிறங்கிய தமன்னா.. திகில் கிளப்பும் ஒடேலா 2 டீசர்

Marimuthu M HT Tamil Published Feb 22, 2025 04:33 PM IST
Marimuthu M HT Tamil
Published Feb 22, 2025 04:33 PM IST

ஒடேலா 2 டீசர்: அசோக் தேஜா இயக்கத்தில் சம்பத் நந்தி எழுதியுள்ள இப்படத்தில் நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தமன்னாவின் புது அவதாரம்.. அமானுஷ்ய படத்தில் சிவதுறவியாக களமிறங்கிய தமன்னா.. திகில் கிளப்பும் ஒடேலா 2 டீசர்
தமன்னாவின் புது அவதாரம்.. அமானுஷ்ய படத்தில் சிவதுறவியாக களமிறங்கிய தமன்னா.. திகில் கிளப்பும் ஒடேலா 2 டீசர்

டோலிவுட் இயக்குநர் அசோக் தேஜா எழுதி இயக்கிய அமானுஷ்யம் கலந்த திரில்லர் திரைப்படம், ஒடேலா ரயில் நிலையம். இந்த திரைப்படம் 2022ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பினைப் பெற்றது.

இந்நிலையில் சம்பத் நந்தி எழுத்தில் அசோக் தேஜா மீண்டும் இயக்கிய படம், ஒடேலா 2. இப்படம் ஒடேலா ரயில் நிலையப் படத்தின் தொடர்ச்சியாகும்.

இந்தப் படத்தில் தமன்னா பாட்டியா ஒரு சிவதுறவியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசரை படக்குழு, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வில் இன்று வெளியிட்டது.

ஒடேலா ரயில் நிலையம் ஒரு கிரைம் த்ரில்லராக இருந்த நிலையில், ஒடேலா 2 திரைப்படம் அமானுஷ்யப் பாதையில் பயணிப்பதாக டீசரில் இருந்து அறிந்துகொள்ளப்படுகிறது.

இப்படத்தில் ஒடேலா ரயில் நிலையம் படத்தில் நடித்திருந்த பெண் கதாநாயகி ஹெபா படேலும் நடிக்கிறார். ஒரு நிமிடம் 52 விநாடிகள் ஓடும் இந்த ஒடேலா 2 படத்தின் டீஸர் அதிகம் கதையை வெளியில் சொல்லவில்லை.

ஆனால், தமன்னாவின் சிவதுறவி கதாபாத்திரம், ஒடேலா கிராமத்தில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் மல்லண்ணா சுவாமி இருக்கும் ஒரு கிராமத்தில், நிலம், நீர், காற்று,ஆகாயம், பூமி ஆகிய பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்தும், ஒரு தீமையை எதிர்த்துப் போராட வருகை தருவதுபோல் காட்டப்படுகிறது.

அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சௌந்தர்ராஜன்.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்க மேற்பார்வையினை சம்பத் நந்தி செய்திருக்கிறார். அசோக் தேஜா படத்தை இயக்கியிருக்கிறார்.

ஒடேலா 2 திரைப்படம் பற்றி பேசிய தமன்னா:

ஓடேலா 2 படத்தின் டீஸர் வெளியான பிறகு, நடிகை தமன்னா பேசுகையில், "நாங்கள் இந்த படத்தை மிகச் சிறிய அளவில் எடுக்கும் யோசனையுடன் தான் தொடங்கினோம். ஆனால், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இந்தப் படத்தை தயாரிப்பதற்காக படக்குழுவுக்கு நிறைய ஆசீர்வாதங்களும் பணமும் கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். டீஸரை மகாகும்பமேளா நிகழ்வின்போது வெளியிட்டதில் நான் பாக்கியசாலியாக உணர்கிறேன். ஏனென்றால், அதை நாங்கள் வேறு எங்காவது வெளியிட்டிருந்தால் நன்றாக இருக்காது’’ என்றார்.

அதைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் டீஸரைப் பகிர்ந்த நடிகை தமன்னா, "பிசாசு ஊருக்குள் திரும்பி வரும்போது, தெய்வீக சக்தி அதன் நிலத்தையும் அதன் மரபையும் பாதுகாக்க முன்வருகிறது" என்று எழுதியிருக்கிறார்.

இந்த கதாபாத்திரத்திற்கு தயாராவதற்காக தமன்னா, நிறைய சாதுக்களின் உடல் மொழியை ஆய்வு செய்ததாக வெளியீட்டு விழாவில் ஒடேலா 2 படக்குழுவினர் தகவல் பகிர்ந்தனர்.

ஒடேலா 2 படக்குழுவினர் பற்றி:

ஒடேலா 2 படத்தில் வசிஷ்ட என்.சிம்ஹா, யுவா, நாகமகேஷ், வம்ஷி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால் மற்றும் பூஜா ரெட்டி ஆகியோர் ஒடேலா 2 படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒடேலா 2 படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. டீஸர் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

கடந்த ஆண்டு காசியில்(வாரணாசி) ஒடேலா 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.