தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'தனிமையிலே இனிமை காண முடியுமா’.. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்திய பாடகர் ஏ. எம். ராஜா நினைவு நாள் இன்று!

'தனிமையிலே இனிமை காண முடியுமா’.. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்திய பாடகர் ஏ. எம். ராஜா நினைவு நாள் இன்று!

Divya Sekar HT Tamil
Apr 08, 2024 05:45 AM IST

A.M.Raja Memorial Day : தேன்நிலவு திரைப்படத்தில் ஏ எம் ராஜா இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் அவ்வளவு அருமையாக இருக்கும். குறிப்பாக நிலவும் மலரும் பாடுது, பாட்டு பாடவா பார்த்துப் பேசவா, ஓஹோ எந்தன் பேபி, சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் போன்ற அற்புதமான பாடல்களை கொடுத்திருப்பார் ராஜா.

பாடகர் ஏ. எம். ராஜா நினைவு நாள் இன்று
பாடகர் ஏ. எம். ராஜா நினைவு நாள் இன்று

ட்ரெண்டிங் செய்திகள்

இல்லற ஜோதி படத்தில் ஜிக்கியுடன் கலங்கமில்லா காதல் பாடலை இணைந்து பாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குலேபகாவலி படத்தில் ஏ எம் ராஜா, ராஜாஜிக்கு பாடிய பாடல் ஆன மயக்கும் மாலை பொழுதே பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தன்னுடன் இணைந்து பாடிய ஜிக்கியை திருமணம் செய்து கொண்டார்.

 மிஸ்ஸியம்மா படத்தில் ஏ எம் ராஜா பாடிய பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக வாராயோ வெண்ணிலாவே என்ற பாடல் இன்றும் அனைவரும் முணுமுணுக்கும் பாடலாகவே உள்ளது. அப்பாடலை அவ்வளவு அருமையாக பாடியிருப்பார்.

எம்ஜிஆருக்கு சில பாடல்களை ஏ.எம். ராஜா பாடியுள்ளார். அப்படி அவர் பாடிய பாடல்களில் அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்தில் மாசிலா உன்னை காதலி பாடலை இவர் தனது அற்புத குரலால் பாடி அசத்தியிருப்பார்.

அதேபோல மகாதேவி திரைப்படத்தில் பெண்ணே உன் பேரழகின் விலை என்னவோ பாடலை பாடியிருப்பார். அதேபோல ஏ.எம். ராஜா சிவாஜி ,எஸ் எஸ் ஆர் ஆகியோருக்கும் பாடல்களை பாடியுள்ளார்.

அமரதீபம் என்ற படத்தில் சிவாஜிக்காக காற்றினிலே தென்றல் காற்றினிலே பாடலை பாடியிருப்பார். எஸ் எஸ் ஆரகாக பெற்ற மகனை விற்ற அன்னை என்ற படத்தில் தென்றல் உறங்கிய போதும் என்ற பாடலை பாடி இருப்பார். இந்த பாடல் செம ஹிட் பாடலாக இருந்தது.

இவர் பெரும்பாலான பாடல்களை ஜெமினிகணேசனுக்கு தான் பாடியிருப்பார். அந்த வகையில் இவர் கல்யாணப்பரிசு திரைப்படத்தில் இசையமைத்து பாடிய அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற பாடல்கள்.

மீண்ட சொர்க்கம் என்ற படத்தில் வரும் பாடல் வரிகள் இவரின் கலை வாழ்வை பிரதிபலிப்பதாக இருக்கும். கலையே என் வாழ்க்கையை திசை மாற்றினாய் என்பதுதான் அந்த பாடல். அதேபோல இப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடல் காதலன் காதலி இடையே நடைபெறும் உரையாடலை போல அமைந்திருக்கும். இது மற்ற பாடல்களை விட வித்தியாசமாக அமைந்திருக்கும்.

பார்த்திபன் கனவு திரைப்படத்தில் வேதா இசையில் ஏ எம் ராஜா பாடிய பாடல்கள் கேட்க கேட்க திகட்டாத பாடல்கள். தேன்நிலவு திரைப்படத்தில் ஏ எம் ராஜா இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் அவ்வளவு அருமையாக இருக்கும். குறிப்பாக நிலவும் மலரும் பாடுது, பாட்டு பாடவா பார்த்துப் பேசவா, ஓஹோ எந்தன் பேபி, சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் போன்ற அற்புதமான பாடல்களை கொடுத்திருப்பார் ராஜா.

களத்தூர் கண்ணம்மாவில் ஏ எம் ராஜாவின் பாடல் அக்காலத்தில் மிகப் பிரபலம். ஆடிப்பெருக்கு திரைப்படத்தில் இடம்பெற்ற தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற பாடல் பிரபலமாக இருந்தது.

1963ல் பாடுவதை நிறுத்திக் கொண்ட ஏ எம் ராஜா 1971இல் மீண்டும் பாட தொடங்கினார். அதன் பிறகு புகுந்த வீடு திரைப்படத்தில் இடம்பெற்ற ராசி நல்ல ராசி, வீட்டு மாப்பிள்ளை திரைப்படத்தில் இடம் பெற்ற செந்தாமரையே பாடல் என அடுத்தடுத்து பாடல்களை பாடத் தொடங்கினார்.

இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் சிங்களம் போன்ற பல மொழிகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 1989 ஆம் ஆண்டு ஒரு இசை நிகழ்ச்சிக்கு நாகர்கோவிலுக்கு சென்ற போது கிள்ளியூர் ரயில் நிலையம் ஒன்றில் கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இவரின் நினைவுநாள் இன்று. இன்றைய தினம் அவரை நினைவு கூறுவோம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்