Richest Actor: ரூ. 3500 கோடி சொத்து வைத்துள்ள தென்னிந்திய பணக்கார நடிகர் யார் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Richest Actor: ரூ. 3500 கோடி சொத்து வைத்துள்ள தென்னிந்திய பணக்கார நடிகர் யார் தெரியுமா?

Richest Actor: ரூ. 3500 கோடி சொத்து வைத்துள்ள தென்னிந்திய பணக்கார நடிகர் யார் தெரியுமா?

Malavica Natarajan HT Tamil
Feb 05, 2025 02:34 PM IST

Richest Actor: தென்னிந்திய சினிமா தற்போது பாலிவுட்டிற்கு சவால் விடும் நிலையில், அதிக சொத்து வைத்திருப்பதிலும் தற்போது சவால் விட்டு வருகிறது. தென்னிந்தியாவை சேர்ந்த நடிகர் ஒருவர் சுமார் 3500 கோடி ரூபாய் சொத்து சேர்த்து பாலிவுட்டிற்கே சவால் விட்டுள்ளார். அவர் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.

Richest Actor: ரூ.  3500 கோடி சொத்து வைத்துள்ள தென்னிந்திய பணக்கார நடிகர் யார் தெரியுமா?
Richest Actor: ரூ. 3500 கோடி சொத்து வைத்துள்ள தென்னிந்திய பணக்கார நடிகர் யார் தெரியுமா?

இதனால் தென்னிந்திய நட்சத்திரங்களின் அந்தஸ்தும் அதிகரித்துள்ளது. சிலர் தற்போது அதிக சொத்துகளை வைத்திருப்பதால் பல முன்னணி பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். தென்னிந்தியாவின் மிகப் பெரிய பணக்கார நட்சத்திரமாக உள்ள ஒருவர் பாலிவுட்டின் பெரும்பாலான நட்சத்திர நடிகர்களை விடவும் பணக்காரர் என்பது தெரியுமா உங்களுக்கு?

தென்னிந்தியாவின் மிகப் பணக்கார நடிகர்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா அக்கினேனி தான் தற்போது தென்னிந்தியாவின் மிகப் பணக்கார நடிகர் ஆவார். மணி கண்ட்ரோல் வெளியிட்ட தகவல் படி, நாகார்ஜுனாவுக்கு 410 மில்லியன் டாலர்கள் அதாவது 3572 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு உள்ளது. இது அவரை இந்தியாவின் மிகப் பணக்கார நடிகர்களில் ஒருவராக ஆக்குகிறது.

ஷாருக் கான் மற்றும் ஜூஹி சாவ்லாவுக்கு அடுத்து இவரது சொத்து மதிப்பு அதிகமாக இருக்கிறது. நாகார்ஜுனாவின் அபரிமிதமான செல்வம் அவரை அமிதாப் பச்சன் (3200 கோடி ரூபாய்), ஹிருத்திக் ரோஷன் (3100 கோடி ரூபாய்), சல்மான் கான் (2900 கோடி ரூபாய்), அக்ஷய் குமார் (2700 கோடி ரூபாய்) மற்றும் ஆமிர் கான் (1900 கோடி ரூபாய்) போன்ற ஏ-லிஸ்ட் பாலிவுட் நட்சத்திரங்களை விடவும் பணக்காரக மாற்றியுள்ளது.

தென்னிந்திய பணக்கார நடிகர்கள்

நான்கு தென்னிந்திய திரைப்படத் துறைகளில் உள்ள நடிகர்களில், நாகார்ஜுனாவைத் தொடர்ந்து அதிக சொத்துக்களை வைத்திருப்பவர் அவரது சக நடிகரான சிரஞ்சீவி தான். அவரது சொத்து மதிப்பு 1650 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இவருக்கு அடுத்தபடியாக ராம் சரண் (1370 கோடி ரூபாய்), கமல்ஹாசன் (600 கோடி ரூபாய்), ரஜினிகாந்த் (500 கோடி ரூபாய்), ஜூனியர் என்.டி.ஆர் (500 கோடி ரூபாய்) மற்றும் பிரபாஸ் (250 கோடி ரூபாய்) ஆகியோர் பணக்கார நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

நாகார்ஜுனா எப்படி சம்பாதித்தார்?

நாகார்ஜுனா தெலுங்கு சினிமாவில் மிகவும் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவராக இருந்தாலும், அவர் எப்போதும் முன்னணி நட்சத்திரமாக இருந்ததில்லை. பிரபாஸ் மற்றும் ராம் சரண் அவரை முந்திச் செல்லும் வரை, நீண்ட காலமாக அந்த இடம் சிரஞ்சீவிக்குச் சொந்தமானதாக இருந்தது. இருப்பினும், நாகார்ஜுனா அவர்களை விடவும் பணக்காரர். இது புத்திசாலித்தனமான வணிக முதலீடுகள் மற்றும் சொத்துரிமையால் சாத்தியமானது.

நாகார்ஜூனா தொழில்கள்

நாகார்ஜுனா தனது செல்வத்தை திரைப்படங்களில் மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட், சினிமா மற்றும் விளையாட்டு உரிமைகள் உள்ளிட்ட பிற வணிகங்களில் முதலீடு செய்ததன் மூலமும் சேர்த்துள்ளார். நாகார்ஜுனா, டாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அன்னபூர்ணா ஸ்டுடியோஸின் உரிமையாளர். அவர் N3 ரியல் எஸ்டேட் என்டர்பிரைசஸ் என்ற ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத்தையும் வைத்திருக்கிறார்.

தினமலர் படி, நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அனைத்து ரியல் எஸ்டேட்டுகளின் மதிப்பு சுமார் 900 கோடி ரூபாய் ஆகும். கூடுதலாக, நாகார்ஜுனா மூன்று விளையாட்டு உரிமைகளையும், தனியார் விமானம் மற்றும் அரை டஜன் சொகுசு கார்கள் போன்ற பல சொகுசு பொருட்களையும் வைத்திருக்கிறார் எனத் தெரிகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.