தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Amyra Dastur Opens About The Struggle She Faces In Cinema

Amyra Dastur: 18 மணி நேர காத்திருப்பு..உடலை இழுத்து அழுத்திய நடிகர்..தனுஷ் பட நடிகை

Aarthi Balaji HT Tamil
Jan 14, 2024 06:30 AM IST

மீ டு நேர்காணலின் ஒரு பகுதியாக பலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நடிகை அமைரா தஸ்தூர் அவர்களில் ஒருவர்.

அமைரா
அமைரா

ட்ரெண்டிங் செய்திகள்

மீ டு நேர்காணலின் ஒரு பகுதியாக பலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நடிகை அமைரா தஸ்தூர் அவர்களில் ஒருவர்.

தென்னிந்திய சினிமா அல்லது பாலிவுட்டில் இருந்து அவர் இதுவரை காஸ்டிங் கவுச்சை எதிர்கொண்டதில்லை. ஆனால் இரு தரப்பிலிருந்தும் நான் அவமானப்பட்டு இருக்கிறேன். அவர்கள் அனைவரும் சக்தி வாய்ந்தவர்கள். அதனால் அவர்களின் பெயர்களை வெளியிட எனக்கு தைரியம் இல்லை. ஒரு நாள் அவர்களிடம் மனம் திறந்து பேசுவேன்.

எனது பாதுகாப்பு குறித்து உறுதியளிக்கும் வரை நான் விரலைக் காட்ட மாட்டேன். அவர்கள் யார், என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். இப்போது நான் சொல்ல விரும்புவது அவர்கள் பிரிவினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான். மாற்றத்தின் காற்று வீசுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருமுறை ஒரு பாடல் காட்சியில் நடிக்கும் போது ஹீரோ என்னை தன் உடம்புக்கு அருகில் இழுத்து இறுக்கிப் பிடித்தார். என்னுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். நான் அவரைத் தள்ளிவிட்டு பேசுவதை நிறுத்தினேன். 

ஆனால் அவர் என் வாழ்க்கையை பரிதாபமாக மாற்றினார். இதை இயக்குனரிடம் சொன்னபோது, ​​அமைதியாக இருந்து ரசியுங்கள் என சொன்னார்.

முன்பு என்னை படப்பிடிப்புக்கு அழைத்தார்கள். எனது ஷாட்டுக்காக நான் மணிக்கணக்கில் காத்திருந்தேன். இது 18 மணி நேரம் வரை படமாக்கப்பட்டது. 4,5 மணி நேரம் தான் தூங்குவது வழக்கமாக இருந்தது.

நான் நடிகரிடம் மன்னிப்பு கேட்டேன். அவரை தொடர்ந்து புறக்கணிக்கும் எனது மோசமான நடத்தைக்காக. தயாரிப்பாளர் மன்னிப்பு கேட்க வைத்தார். அவர் சில சமயங்களில் என்னை செட்டுக்கு சீக்கிரம் கூப்பிடுவார். 

வேனிட்டி வேனில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். கடைசியாக உதவி இயக்குனர் கிளம்பிவிடுங்கள் இன்று எனக்கு காட்சி இல்லை என சொல்வார் “ என்றார். அமைரா பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழில் அமைரா, நடிகர் பிரபு தேவாவுக்கு ஜோடியாக பஹீரா படத்தில் நடித்து இருந்தார். அதை தவிர தமிழ் படங்களில் அவர் அதிகமாக கவனம் செலுத்துவது இல்லை. இந்தி படங்களில் நடிக்கவே அவர் ஆர்வமாக இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.