Amy Jackson: பாலத்தின் மீது அரங்கேறியா காதல் புரொபோசல்! காதலரை கரம் பிடிக்கும் எமி ஜாக்சன்
இங்கிலாந்தை சேர்ந்த மாடலும், நடிகையுமான எமி ஜாக்சன், எட் வெஸ்ட்விக் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்தவரான எமி ஜாக்சன் மிஸ் டீன் வேர்ல்டு பட்டத்தை வென்ற நிலையில், தமிழில் மதராசபட்டினம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தார். தொடர்ந்து நடிப்பு, மாடலிங் என பிஸியாகவே இருந்து வருகிறார் எமி ஜாக்சன்.
இதைத்தொடர்ந்து பிரபல நடிகர், இசையமைப்பாளரான எட் வெஸ்ட்விக் - எமி ஜாக்சன் ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதனை இந்த ஜோடிகள் இணைந்து தங்களது இன்ஸ்டாவில் அறிவித்துள்ளனர்.
இவர்கள் தங்களது திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். அதில் சுவிட்ர்சர்லாந்தில் இருக்கும் பிரபல பாலத்தின் மீது வைத்து எமி ஜாக்சனுக்கு புரொபோஸ் செய்துள்ளார் எட் வெஸ்ட்விக். முழங்கால்களை மடக்கி முட்டி போட்டுக்கொண்டு புரொபோஸ் செய்யும் எட் வெஸ்ட்விக்கை ஆச்சர்யம் கலந்த பார்வையுடன் எமி ஜாக்சன் வாயில் கையை வைத்து பொத்தியபடி பார்க்கிறார்.
மற்றொரு புகைப்படத்தில், வெஸ்ட்விக் பின்னால் இருந்தவாறு அவரை இறுக்க கட்டி கொண்டிருக்கிறார் எமி. மூன்றாவது படத்தில் இருவரும் கட்டிப்பிடித்தவாறு இருக்க சுற்றுலா பயணிகள் அவர்களை பார்த்தவாறும், மற்றொரு கேண்டிட் புகைப்படமொன்றையும் பகிர்ந்துள்ளனர்.
இந்த பதிவில், நிச்சயதார்த்த மோதிர எமோஜியுடன் யெஸ் என குறிப்பிட்டுள்ளனர். எமியின் இந்த பதிவுக்கு பிரபல மற்ற நடிகைகளான ஸ்ருதிஹாசன், கியாரா அத்வானி உள்பட பலரும் ஹார்ட் எமோஜியுடன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
கிராக் என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வரும் எமி ஜாக்சன், அந்த படத்தில் தனது பகுதிகளில் நடித்து முடித்துவிட்டதாக கடந்த மாதம் அறிவித்தார். இதைத்தொடர்ந்து தற்போது இந்த ஆண்டின் தொடக்க மாதம் முடிவடைய இருக்கும் இந்த நேரத்தில், அவருடன் கிசுகிசுக்கப்பட்ட நபரான எட் வெஸ்ட்விக்கை கரம் பிடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார்.
