Amudhavum Annalakshmiyum:அடுத்த அதிர்ச்சி, அன்னம் போட்ட கண்டிஷனால் அமுதா எடுத்த முடிவு!
காலையில் அமுதா ஸ்கூல் கிளம்ப, அன்னம் கேண்டீன் பற்றி கேக்க, அமுதா முடியாது என மறுக்கிறாள்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வராஜ் அறைக்குள் சென்று வடிவேலுவை அடி வெளுக்க அவன் செல்வராஜிடம் நான் பண்ணதை வெளில சொன்னீங்கன்னா உண்மையாவே விஷம் குடிச்சி செத்துருவேன்.. உங்க பேரப் பிள்ளை அனாதையா ஆயிரும் என மிரட்டுகிறான்.
இதனால் செல்வராஜ் வெளியே வந்து வடிவேலு பிழைத்து விட்டதாக சொல்ல அன்னம் அமுதாவிடம் என் பையன் உயிர் போயி வந்திருக்கு, அவனுக்கு கேண்டீன் காண்டராக்டை குடுத்தே ஆக வேண்டும் என சொல்கிறாள்.
செல்வராஜிடம் அமுதா என்ன செய்ய என கேக்க, அவர் பதவி, பொறுப்பு பற்றி சொல்லி, உனக்கு எது நியாயமா படுதோ அதை செய்யும்மா என சொல்கிறார்.
மறுநாள் காலையில் அமுதா ஸ்கூல் கிளம்ப, அன்னம் கேண்டீன் பற்றி கேக்க, அமுதா முடியாது என மறுக்கிறாள்.
இதனால் சுமதி அமுதா அவளது அண்ணனுக்கு அந்த காண்ட்ராக்டை குடுத்துவிட்டதாக சொல்ல அன்னலட்சுமி அதை கேட்டு அப்செட் ஆகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்