Ammer: சிவாஜிக்காக பிடுங்கப்பட்ட விருது; மாபெரும் கலைஞனின் சோக வாக்கு!
சிவாஜிக்கு விருது கொடுக்கப்பட்டதன் பிண்ணனி குறித்து அமீர் பேசி இருக்கிறார்
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் நடிகர்கள் கலையரசன், வாணி போஜன் நடித்துள்ள ‘செங்களம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும் நடிகருமான அமீர் சிவாஜிக்கு மாநில அரசால் கொடுக்கப்பட்ட சிறப்பு விருதின் பிண்ணனியில் இருக்கும் அரசியல் பற்றி மிகவும் வெளிப்படையாக பேசினார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அவர் பேசியதாவது, “ இந்தியாவிலேயே மிகச்சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் தான். ஒருமுறை சிவாஜிகணேசன் வெளிநாடு செல்லும் பொழுது அங்கிருந்த ஹாலிவுட் கலைஞர்கள் அனைவருமே அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டது உண்டு.
ஹாலிவுட் கலைஞர்களிடம் அப்போது இருந்த டெக்னாலஜி என்பது வேறு. அப்படி இருக்கும் பொழுது எந்தவித டெக்னாலஜியும் இல்லாமல் ஒரு தனி மனிதன் மேக்கப்பை மட்டும் வைத்துக்கொண்டு நவராத்திரி, தெய்வமகன் ஆகிய படங்களில் அவர் நடித்த நடிப்பை பார்த்து அவர்கள் பிரமித்து நின்றார்கள். இந்தியாவிலேயே சிவாஜிகணேசன் மிஞ்சிய நடிகர் கிடையவே கிடையாது. ஆனால் சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது கொடுக்கப்படவில்லை.
ஏன் கொடுக்கவில்லை என்றால் அதில் அவ்வளவுதான் (லாபி) இருக்கிறது. அப்படி என்றால் அதற்குள் எது இருந்திருக்கிறது என்பதை நீங்களே யூகித்துகொள்ளுஙகள். கடைசியாக தேவர் மகன் திரைப்படத்தை சிவாஜி முடித்து வந்த போது தான் அவருக்கு சிறப்பு விருது கொடுக்கப்பட்டது.
அப்பொழுது கூட ஒரு நேர்காணலில் அவரிடம் இது குறித்து கேட்கும் பொழுது இது கொடுக்கப்படவில்லை.. நடுவர் குழுவில் நமக்கு தெரிந்த ஆட்கள் இருந்ததால் அவர்கள் புடுங்கிக் கொண்டு வந்தார்கள் என்று அவர் ஒரு கருத்தைச் சொன்னார். இது எல்லா காலகட்டத்திலும் நடக்கும்.” என்று பேசினார்.