‘அந்த விஷயத்தில் நான் கர்நாடகாவிற்கு ஆதரவாக நிற்கிறேன்.. ஆந்திராவிற்கு ஆதரவாக நிற்கிறேன்’- கமல்ஹாசன் பேச்சு!
தென் மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார்.

‘அந்த விஷயத்தில் நான் கர்நாடகாவிற்கு ஆதரவாக நிற்கிறேன்.. ஆந்திராவிற்கு ஆதரவாக நிற்கிறேன்’- கமல்ஹாசன் பேச்சு! (PTI)
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்து கன்னட மொழி வந்தது எனக்கூறி சர்ச்சையில் சிக்கிய கமல்ஹாசனுக்கு கர்நாடகாவில் பயங்கர எதிர்ப்பு நிலவியது. இதற்காக மன்னிப்புக் கேட்க கோரியும் கமல்ஹாசன் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில் அவரின் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் என்று கர்நாடக வர்த்தக சபை கூறியது. கர்நாடக நீதிமன்றமும் கமலை மன்னிப்புக்கேட்கச் சொல்ல ஆனால் கடைசி வரை கமல் மன்னிப்புகேட்க வில்லை. இதனால் கடந்த ஜூன் 5 அன்று கர்நாடகா தவிர்த்து பிற மாநிலங்களில் தக் லைஃப் படம் வெளியானது.
இந்தப்படத்தை புரோமோட் செய்யும் போது கமல்ஹாசன் கன்னட மொழி சர்ச்சையை அசால்ட்டாக கையாண்டாலும், இந்தி திணிப்பு பிரச்சினையில், அவர் கர்நாடகாவிற்கு ஆதரவாகவே குரல் கொடுத்தார்.