Tamil News  /  Entertainment  /  Ameer Says He Is Going To Marry Pavani In 2024

Ameer, Pavani Marriage: தாலி எடுத்து கொடுக்கும் விஜே பிரியங்கா..பாவனி, அமீர் திருமணம் எப்போது தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Jan 22, 2024 07:15 AM IST

Ameer, Pavani Marriage: அமீர், பாவனி திருமணம் எப்போது நடக்க போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அமீர், பாவனி திருமணம்
அமீர், பாவனி திருமணம்

ட்ரெண்டிங் செய்திகள்

இவர்கள் இருவரும் தற்போது சென்னையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். பாவனி, அமீரை விட வயதில் மூத்தவர். இருந்தாலும் வயது காதலுக்கு தடை இல்லை என சொல்லி காதலித்து வருகிறார்கள்.

திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் இவர்கள் வசித்து வருவது சர்ச்சையாக பேசப்பட்டாலும் அதை எல்லாம் இவர்கள் இருவரும் சற்றும் கண்டு கொள்வது இல்லை.

இதனிடையே சமீபத்தில் அமீர், விஜே பிரியங்காவின் 15 கால கலை வாழ்க்கையை கொண்டாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பாவனி குறித்து ஏகப்பட்ட விஷயங்களை முன் வைத்தார்.

மேலும் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்ற கேள்விக்கும் பதில் கூறினார்.

அவர் கூறுகையில், “ விஜய் தொலைக்காட்சியில் நடந்த பிபி ஜோடிகளில் திருமணம் சுற்று இருந்தது. அதில் பிரியங்கா தான் மாங்கல்யம் எடுத்து கொடுக்க வேண்டும் என நான் சொல்லி இருந்தேன். ரியலாக திருமணம் நடந்தாலும் மாங்கல்யம் பிரியங்கா தான் எடுத்து கொடுப்பார். 

பாவனி என்னுடன் இருப்பதற்கு முக்கிய காரணம் பிரியங்கா. எங்கள் திருமணம் இந்த ஆண்டு நடந்துவிடும். பாவனியும், பிரியங்காவும் என்னை கழட்டிவிட்டுச் செய்யும் சில செயல்கள் கோபத்தை ஏற்படுத்தும், ஆனால் பரவாயில்லை என விட்டுவிடுவேன் “ என்றார்.

நீண்ட நாட்களாக அமீர், பாவனி திருமணம் எப்போது நடக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு செம குஷியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாவனி தமிழில் சின்னத்திரை நடிகையாகப் பல சீரியல்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு காதல் திருமணம் செய்து கொண்டு கணவரோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

ஆனால் இதற்கிடையில், திடீரென ஒரு நாள் அவரின் கணவர் தற்கொலை செய்து கொண்ட பிறகு நிலைகுலைந்து போனார் பாவனி. அவரை எங்கும் பார்க்கவே முடியவில்லை. பின்னர் மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சின்ன தம்பி’ சீரியல் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். அதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அப்படி தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அதில் கலந்து கொண்ட போது அமீர், வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தார். 

அப்போது பாவனி மேல் தனக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தினார். அதை பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக அவர் செய்கிறார் என பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. ஆனால் வெளியே வந்தும் அது தொடர்ந்தது. ஆனால் பாவனி அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. இறுதியாக பிபி ஜோடிகள் நிகழ்ச்சி முடிந்தவுடன் தான், அமீர் காதலுக்குப் பச்சை கொடி காட்டினார் பாவனி.

சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான ஜோடிகளாக வலம் வரும் அமீர் - பாவனி, நடிகர் அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படத்தில் ஜோடியாகவே நடித்திருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.