Pavani, Ameer Marriage: திருமண தேதி உறுதியானது.. பாவனி - அமீர் திருமணம் எப்போது தெரியுமா?
Pavani, Ameer Wedding: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக ஜோடி சேர்ந்த அமீர், பாவனியின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Ameer, Pavani: பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒரு பக்கம் சண்டை இருக்கும் என அனைவருக்கும் தெரியும். அதே போல் ஒவ்வொரு சீசனிலும் காதலும் இருக்கும். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 ஆவது சீசன் மூலம் அமீர் மற்றும் பாவனி ரெட்டி நட்சத்திர ஜோடிகளாக மாறினர். நிகழ்ச்சி உள்ளே இருக்கும் போதே பல முறை அமீர் தன் காதலை பாவனியிடம் கூறினார்.
பின்னர் பிபி ஜோடிகள் நிகழ்ச்சி நடைபெறும் போது ஜோடிகளாக நடனமாடிய போதும் அமீர் தன் காதலை விதவிதமாக பாவனியிடம் கூறினார். இறுதியாக நிகழ்ச்சி முடியும் தான் அமீரின் காதலை ஏற்றுக் கொண்டார் பாவனி. அப்போதிலிருந்தே இந்த ஜோடி பலரின் விருப்பமானவர்களாக மாறினார்கள்.
பாவனி, அமீர் தற்போது சென்னையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். அமீர், பாவனியை விட வயதில் மூத்தவர். ஆனால் காதலுக்கு வயது ஒரு தடையே கிடையாது என இவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் பாவனி, அமீர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார்கள். அப்போது அதில் தங்களின் திருமணம் தேதி குறித்த கேள்விக்கு அமீர் ஓபனாக பதில் கூறி பாவனிக்கு ஷாக் கொடுத்தார்.
அமீர் கூறுகையில், " பாவனி முன்னாள் திருமணம் பற்றிய காயம் இன்னும் அவருக்கு இருக்கிறது. அந்த அளவிற்கு அவர்களின் காதல் இருந்து இருக்கிறது. ராசி இல்லாதவர் என்று தன்னை சொல்லி கொண்டே இருப்பார். எனக்கு தெரியும் அது எல்லாமே ஒன்றுமே இல்லாமல் ஆகப் போகிறது என்று.
நான் பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளே இருந்த போது எல்லாருமே இது நிகழ்ச்சிக்காக நான் செய்கிறேன் என சொன்னார்கள். வெளியே வந்தவுடன் அந்த பெண் சரி சொன்னவுடன் மாறிவிடும் என சொன்னார்கள்.
லிவிங் டு கெதிரில் இருக்கின்றனர். பிறகு அவர்கள் பிரிந்து சென்றுவிடுவார்கள் என பேசினார்கள். திருமணத்திற்கு பிறகு எளிதாக இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிடும் என்று கூட பேசினார்கள். இது எல்லாம் கேட்கும் போது எனக்கு சிரிப்பு வரும். நான் என்ன செய்ய போகிறேன் என்பது எனக்கு தெரியும்.
இந்த வருடம் நவம்பர் 9 ஆம் தேதி எங்களுக்கு திருமணம். பாவனி பிறந்த நாளன்று தான் எங்களுக்கு திருமணம் நடக்க போகிறது “ என்றார்.
முன்னதாக ஒரு பேட்டியில் அமீர், “ பாவனி என்னுடைய காதலை ஏற்றுக் கொண்டு இப்போது என்னுடன் இருப்பதற்கு முக்கிய காரணம் பிரியங்கா தான். அதனால் அவர் தான் எங்களுக்கு தாலி எடுத்து கொண்டு திருமணம் செய்து வைப்பார் “ என்றார்.
நீண்ட நாட்களாக பாவனி, அமீர் திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அவர்களுக்கு அமீரின் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்