தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Ameer: ‘அந்த குடும்பத்துல காய்கறி வித்தவனெல்லாம் என்ன.. சிவகுமார் வேடிக்கை பார்த்தாரு’ - இயக்குநர் அமீர்!

Director Ameer: ‘அந்த குடும்பத்துல காய்கறி வித்தவனெல்லாம் என்ன.. சிவகுமார் வேடிக்கை பார்த்தாரு’ - இயக்குநர் அமீர்!

Kalyani Pandiyan S HT Tamil
May 10, 2024 05:30 AM IST

Director Ameer interview: இன்றைக்கு ஜாபர் சாதிக் வழக்கில் 70 நாட்கள் குற்றவாளி போல நிற்கிறேனே… அதேபோல 60 நாட்கள், அப்போது குற்றவாளியாக நின்று கொண்டிருந்தேன். அன்றும் எனக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை - இயக்குநர் அமீர்!

Director Ameer: ‘அந்த குடும்பத்துல காய்கறி வித்தவனெல்லாம் என்ன.. சிவகுமார் வேடிக்கை பார்த்தாரு’  - இயக்குநர் அமீர்!
Director Ameer: ‘அந்த குடும்பத்துல காய்கறி வித்தவனெல்லாம் என்ன.. சிவகுமார் வேடிக்கை பார்த்தாரு’ - இயக்குநர் அமீர்!

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போதே தோற்று விட்டேன்.

 

இது குறித்து அவர் பேசும் போது, “பருத்திவீரன் திரைப்படம் எடுத்த போதே நான் தோற்று விட்டேன். ஒரு புதுமுக நடிகரை உருவாக்கி கொண்டு வந்து, படத்தை எடுத்து, அதில் நானே சொந்தமாகவும் முதலீடு செய்து, கஷ்டப்பட்டு  படத்தை உருவாக்கினால், ரிலீஸ் சமயத்தில், புரொடியூசர் கவுன்சிலில் என்னை ஒரு குற்றவாளி போல நிற்கவைத்தார்கள். 

இன்றைக்கு ஜாபர் சாதிக் வழக்கில் 70 நாட்கள் குற்றவாளி போல நிற்கிறேனே… அதேபோல 60 நாட்கள், அப்போது குற்றவாளியாக நின்று கொண்டிருந்தேன். அன்றும் எனக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை. 

ப்ரொடியூசர் கவுன்சிலில் சென்று, கைகட்டி நின்றேன்.

 

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த ஒருவர் கூட, எனக்கு ஆதரவாக நிற்கவில்லை. யாரும் உண்மை பேசவில்லை. சத்தியம் பேசவில்லை. 60 நாட்கள் தினமும் ப்ரொடியூசர் கவுன்சிலில் சென்று, கைகட்டி நின்றேன். அப்பொழுதே என் மனதிற்கு பட்டுவிட்டது. இப்படிப்பட்ட ஒரு படத்தை நாம் எடுத்து இருக்கக் கூடாது என்று .. இந்த சமூகம் எவ்வளவு கேவலமான சமூகம் என்பதை உணர்ந்த நேரம் அது. 

விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுது, அவரது வீட்டில் மேனேஜராக இருந்தவன், காய்கறி விற்றவனெல்லாம் என்னை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான். அதை அவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். ரசித்தார்கள். 

அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.

 

பருத்திவீரனை உருவாக்குவதற்கு எந்தவித தொடர்பும் இல்லாதவர்களெல்லாம், என்னை பார்த்து கேள்வி கேட்டார்கள். அப்பொழுதும் நான் அப்படியே அமைதியாக நின்று கொண்டிருந்தேன். 

என்னை கவுன்சிலில் வைத்து அவமானப்படுத்தினார்கள். அய்யய்யோ படத்தை உருவாக்கிய அவருக்கு, அப்படிப்பட்ட ஒரு அவமானத்தை கொண்டு சேர்க்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் யாரும் வந்து கேட்கவில்லை. 

அந்தப் படத்தை ஆரம்பிக்கும் பொழுது, நாம் தானே அவரிடம் சென்று கேட்டோம் என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவே இல்லை. அப்போதும் நான் தனியாகத்தான் நின்றேன். இப்போதும் நான் தனியாகத்தான் நிற்கிறேன்.” என்று பேசினார். 

வெற்றிமாறனுக்கும் எனக்கும் உள்ள உறவு: 

 

முன்னதாக, தனக்கும் வெற்றிமாறனுக்கும் இடையே இருக்கும் நட்பை பற்றி அமீர் ஹிந்துஸ்தான் தமிழ் இணையத்திற்கு பேசினார்.

அந்த பேட்டி இங்கே!

 “நாங்க ஒருவருக்கொருவர் பாராட்டிக்கிறதும் கிடையாது. ஒருத்தரோட நிலைமையைப் பார்த்து இன்னொருத்தர் பொறாமைப்படுறதும் கிடையாது.

அதே போல அவர்கிட்ட இருந்து நானோ.. என்கிட்ட இருந்து அவரோ எதையும் எதிர்பார்க்குறது கிடையாது. வடசென்னையிலதான் எனக்கும் வெற்றிக்குமான நட்பு தொடங்குச்சு. வடசென்னை ராஜன் கேரக்டர்ல என்னை அப்ரோச் பண்றதுக்கு முன்னாடி சமுத்திரக்கனி, சுபரமணிய சிவா, கலை இயக்குநர் ஜாக்ஸன் போன்றவர்களிடம் என்ன பத்தி வெற்றி விசாரிச்சிருக்காரு.

அப்போ அவங்க உங்களால அமீர் கூட 2 மணி நேரத்துக்கு மேல தாங்க முடியாதுன்னு அவங்க அனுபவத்தை சொல்லிருக்காங்க. ஆனாலும் அவர் என்னை அவர் படத்துக்காக அப்ரோச் பண்ணாரு. நான் கதை கேட்காம ஓகே சொன்னேன். அது அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. காரணம் வெற்றிமாறன் அப்படிங்கிற டைரக்டர் மேல எனக்கு பெரிய நம்பிக்கை இருந்துச்சு. நான் ஷூட்டிங் ஸ்பாட் போன பிறகும், நான் இரண்டு நாளுக்கு மேல வெற்றி கூட தாங்க மாட்டேனுதான் எல்லாரும் நினைச்சாங்க.

ஆனா நான் ஒரு நடிகரா அவர்கிட்ட என்னை ஒப்படைச்சிட்டேன். அதனால அவர் என்னை இன்னும் கேரிங்கா பாத்துக்கிட்டாரு. அந்தப் புரிதல் தான் எங்க இருவரையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போச்சு. இப்பவும் நான் வெற்றிமாறன்ட்ட வியந்து பார்க்குறது நாம என்ன சொன்னாலும் அத காது கொடுத்து கேட்குறது தான். நானும் அது போலத்தான்.

வடசென்னையிலிருந்து அவர் என்ன படம் எடுத்தாலும் எனக்கு போட்டு காமிப்பாரு. என்னோட படங்களை நான் அவருக்கு போட்டு காமிப்பேன். இரண்டு பேருமே கருத்துக்கள பரிமாறிக்கிறோம். ஏத்துக்குறோம். இயக்குநர் கரு.பழனியப்பனுக்குப் பிறகு என்னை சரியாக புரிந்து கொண்டவர் வெற்றிமாறன் தான். என்னுடன் SP ஜனநாதன் இல்லாத இடத்தை இப்போது வெற்றி நிரப்புகிறார்.” என்று பேசினார் 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்