இரண்டு தமிழ் படங்கள்.. நாக சைதன்யா, பார்வதி, பிரியா பவானி ஷங்கர் நடித்த திகில் வெப் சீரிஸ்! இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்
பிரபல ஓடிடி தளங்களில் இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள், நாக சைதன்யா, பார்வதி, பிரியா பவானி ஷங்கர் நடித்திருக்கும் திகில் வெப் சீரிஸ் வெளியாகியுள்ளன.

இந்த வாரம் பான் இந்தியா ரிலீஸாக அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் புஷ்பா 2 படம் வெளியாகியுள்ளது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வெளிவருகின்ற போதிலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதியதொரு சாதனை புரிந்துள்ளது. படம் முதல் நாளில் ரூ. 294 கோடி வசூலித்து, ஓபனிங் நாளில் அதிக வசூலை பெற்ற படம் என்ற புதியதொரு சாதனையை புரிந்துள்ளது.
இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்த வாரம் ஓடிடி பிரியர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக சில படங்கள் வெளியாகியுள்ளன. தீபாவளி ரிலீஸ் படங்களில் ஓடிடிக்கு வராமல் இருந்த சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் தற்போது ஸ்டிரீமிங் ஆக தொடங்கியுள்ளது.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
அமரன்
போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அமரன். படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ. 300 கோடியை குவித்துள்ளது. தீபாவளி ரிலீஸாக வெளியான இந்த படம் தற்போது நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது
சார்
விமல் கதையின் நாயகன் நடிக்க, சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் சார். பிரபல நடிகர் போஸ் வெங்கட் இயக்கியிருக்கும் இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றது. கல்வியின் முக்கியத்துவம், கல்வி அனைவருக்கும் சமம் என்பதை எடுத்துரைக்கும் விதமாக உருவாகியிருக்கும் சார் படம் டிசம்பர் 6ஆம் தேதி முதல் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது.
மட்கா
தெலுங்கில் உருவாகியிருக்கும் பீரியட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான மட்கா, ஆந்திரா மாநிலம் விசாகபட்டினத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. வருண் தேஜ், மீனாட்சி செளத்ரி, நோரா பதேகி, சலோனஇ அஸ்வானி, கிஷோர், நவீன் சந்திரா உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த மாதம் வெளியான இந்த படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது
ஜிக்ரா
பாலிவுட் நடிகை ஆலியா பட் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் ஜிக்ரா. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த அக்டோபரில் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இதையடுத்து இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகியுள்ளது.
தூதா, சீசன் 1
விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாக சைதன்யா, பார்வதி திருவோத்து மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ள தெலுங்கு சூப்பர்நேச்சுரல் திகில் சீரிஸாக தூதா உள்ளது. பத்திரிகை, ஒழுக்கம் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நீதி ஆகியவற்றின் கருப்பொருள்களை ஆராயும் விதிமாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
நாக சைதன்யா சாகர் வர்மா என்ற பத்திரிகையாளராக நடித்துள்ளார். பார்வதி டிடெக்டிவாக தோன்றுகிறார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சீரிஸ் அமேசான் ப்ரைம் விடியோவில் வெளியாகியுள்ளது.
