முன்பதிவில் முந்திய அமரன்! முதல் நாள் வசூலே அள்ளப்போகுது! அப்போ பிரதர் படம் கதி!
இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ள அமரன் மற்றும் பிரதர் ஆகிய இரு படங்களின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் வரும் தீபாவளி பண்டிகையின் போது தமிழ் சினிமாக்கள் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களிலும் புதிய திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களும் தீபாவளி பண்டிகை என்று வெளியாகுவது வழக்கமாக ஒன்றாக உள்ளது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இந்த வருட தீபாவளிக்கு பெரிய ஹீரோக்களின் படங்களாக மூன்று படங்கள் வெளியாகிறது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ள சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி மற்றும் கவின் ஆகியோரின் படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாக உள்ளது மேலும் இந்த திரைப்படங்களின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
தொடர் விடுமுறை இந்த வருட தீபாவளி அக்டோபர் 31ஆம் நாள் அதாவது வியாழக்கிழமை வருகிறது. அதனை அடுத்து வருகிற நவம்பர் 1 அன்று தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் குடும்ப ரசிகர்கள் பலர் திரையரங்குகளுக்கு வருவது நிச்சயம். எனவே இதனை இலக்காக வைத்து இந்த முன்னணி ஹீரோக்களின் திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் இப்படங்களை தவிர தீபாவளி போனஸ் போன்ற சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களும் இந்த தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
முன்பதிவில் முந்திய அமரன்
இன்று அமரன் படத்தின் முன்பதிவு தொடங்கிய முன் தொடங்கிய சமயத்தில் இருந்து பல ஊர்களின் முதல் மற்றும் இரண்டாம் சொற்களின் டிக்கெட் தட்ட முடிந்தே விட்டன. இந்நிலையில் மற்ற படங்களை விட அமரன் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வசூல் செய்யும் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் சென்னையில் உள்ள பிரபல முன்னணி தியேட்டர்களில் டிக்கெட்டுகள் முதல் நாள் முழுவதும் உள்ள ஷோக்களில் நிரம்பி உள்ளது. முன்பதிவில் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் முன்னோக்கி செல்வது நல்ல முடிவையே தரும். ஏனெனில் அமரன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெருமளவில் கிளப்பியுள்ளது. இதன் காரணமாகவே அமரன் படத்திற்கு அதிகமான முன்பதிவு கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தின் கதை மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை வாழ்க்கை கதை என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது