புல்லட்டில் தெறித்த ரத்தம்.. காவியமான ராணுவ காதல்.. மழையாய் கொட்டும் கோடிகள்! - சிவகார்த்திகேயன் அமரன் வசூல் எவ்வளவு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  புல்லட்டில் தெறித்த ரத்தம்.. காவியமான ராணுவ காதல்.. மழையாய் கொட்டும் கோடிகள்! - சிவகார்த்திகேயன் அமரன் வசூல் எவ்வளவு?

புல்லட்டில் தெறித்த ரத்தம்.. காவியமான ராணுவ காதல்.. மழையாய் கொட்டும் கோடிகள்! - சிவகார்த்திகேயன் அமரன் வசூல் எவ்வளவு?

Kalyani Pandiyan S HT Tamil
Nov 07, 2024 08:44 AM IST

சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் தொடர்பான வசூல் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன

புல்லட்டில் தெறித்த ரத்தம்.. காவியமான ராணுவ காதல்..   மழையாய் கொட்டும் கோடிகள்! - அமரன் வசூல் எவ்வளவு?
புல்லட்டில் தெறித்த ரத்தம்.. காவியமான ராணுவ காதல்.. மழையாய் கொட்டும் கோடிகள்! - அமரன் வசூல் எவ்வளவு?
அமரன்
அமரன்

அமரன் திரைப்படம் வெளியான 7 வது நாளான நேற்று, 6.75 கோடி வசூல் செய்து இருப்பதாக பாக்ஸ் ஆஃபீஸ் தகவல்களை வெளியிடும் sacnik இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து வெளியான செய்தியில், அமரன் திரைப்படம் இந்திய அளவில் 109 கோடி வசூல் செய்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு?

தமிழில், நேற்றைய தினம் 35.27 சதவீதம் மக்கள் அமரன் திரைப்படத்தை பார்த்து இருக்கிறார்கள். குறிப்பாக, 27.66 சதவீத மக்கள் காலை காட்சியையும், 33.20 சதவீத மக்கள் மதிய காட்சியையும், 39.03 சதவீத மக்கள் மாலை காட்சியையும் 41.20 சதவீத மக்கள் இரவு காட்சியையும் பார்த்து இருக்கிறார்கள். தெலுங்கில் 34.85 சதவீத மக்கள் இந்தப்படத்தை பார்த்து இருக்கிறார்கள்.

நேற்றைய தினம், அமரன் திரைப்படம் கன்னட மொழியில் 26 லட்சம் வசூலித்த நிலையில், கேரளாவில் 4 லட்சம் வசூல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் அமரன் திரைப்படம் 88.32 கோடி வசூல் செய்தி இருக்கிறது. உலகளவில் 168 கோடி வசூல் செய்திருக்கும் அமரன், வெளிநாடுகளில் மட்டும் 50.3 கோடி வசூல் செய்திருக்கிறது. 130 கோடி பட்ஜெட்டில் இந்தப்படம் உருவான இந்தத்திரைப்படம் கமல்ஹாசன் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் பேச்சு

முன்னதாக, படத்தை மிகப்பெரிய வெற்றிபெற செய்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அண்மையில் தமிழில் படக்குழு வெற்றிவிழாவை நடத்திய நிலையில், தெலுங்கிலும் நேற்றைய தினம் வெற்றிவிழாவை நடத்தியது.

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசியதாவது, “ அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும், நானும் விஜய் டிவியில் இருந்தே ஒன்றாக பணியாற்றி வருகிறோம். நான் எப்படி கடினமாக உழைப்பேன் என்று அவருக்குத் தெரியும். அவர் எப்படி உழைப்பார் என்று எனக்குத் தெரியும். அந்த மையப்புள்ளிதான் எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்தது. அமரன் திரைப்படத்தை எடுக்க வைத்தது.

 

அமரன் படத்தில் சாய்பல்லவி
அமரன் படத்தில் சாய்பல்லவி

அதுதான், என்னால் இந்தக் கதாபாத்திரத்தை செய்து விட முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு கொடுத்து இருக்கிறது. ஆனால் அவர் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. காரணம் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். சிறந்த கதை சொல்லி, தற்போது அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்பதையும் நிரூபித்துவிட்டார். சாய்பல்லவியுடன் இணைந்து நடித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி.

பாக்ஸ் ஆபீஸ் வசூலைத் தாண்டி, எங்களது ஜோடியை மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்தமுறை நாங்கள் இணையும் போது, அந்தப்படம் இன்னும் ஸ்பெஷலாக இருக்கும். அதையும் ராஜ்குமார் பெரியசாமிதான் இயக்குவார் என்று நினைக்கிறேன். காரணம், அப்போதுதான் அது அந்தளவுக்கு ஸ்பெஷலாக இருக்கும்.” என்று பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் இருந்து தளபதி என்ற சிலர் சிவாவை அழைத்தனர். அதற்கு பதிலடி கொடுத்த சிவா தளபதி எப்போதுமே விஜய் சார்தான்” என்று கூறினார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ‘ரங்கூன்’ புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் அமரன். India's Most Fearless: True Stories of Modern Millitary புத்தகத்தில் இடம் பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்று அடிப்படையாகக்கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆன நிலையில், சாய் பல்லவியின் கதாபாத்திரம் தொடர்பான வீடியோ படத்திற்கு மிகப்பெரிய ரீச்சைக்கொடுத்தது. தொடர்ந்து படக்குழுவும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று படத்தை புரோமோட் செய்தனர்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.