தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Amala Paul Gives Tremendous Reply To His Fan

திருமணம் செய்துகொள்ள வேண்டும்... அமலா பால் சொன்ன பதில் என்ன?

Aarthi V HT Tamil
Jul 03, 2022 03:53 PM IST

நடிகை அமலா பால் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்ட ரசிகருக்கு நச்சுன்னு பதில் ஒன்றை கொடுத்து இருக்கிறார்.

அமலா பால்
அமலா பால்

ட்ரெண்டிங் செய்திகள்

அடுத்ததாக இவர் நடித்த மைனா திரைப்படம் தான் இவரை பிரபலமடைய வைத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்த அமலா பால் விஜய்யுடன் 'தலைவா'படத்தில் இணைந்தார். இதனையடுத்து எ.எல்.விஜயை திருமணம் செய்துக்கொண்ட அமலா பால் , சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். 

அதன் பின்னர் ஆடை, திருட்டுபயலே 2, குட்டிஸ்டோரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். 

அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டா லைவில் ரசிகர்களுடன் உரையாடி போது அவர், தனது சொந்த வாழ்க்கை குறித்தும் இதர விஷயங்கள் குறித்தும் பேசினார்.

அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர், "உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் என்ன தகுதி இருக்க வேண்டும் என்று கேட்டார். 

அதற்கு பதிலளித்த அமலா பால், “ உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அதை நான் இன்னும் கண்டுபிடிக்க வில்லை. நான் தற்போது சுய தேடுதல் பயணத்தில் இருக்கிறேன். அதை கண்டு பிடித்த உடன் உங்களுக்கு நிச்சயமாக சொல்கிறேன்” என பதிலளித்தார். 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.