Alya Sanjeev: ‘வெறும் 500 ரூபாதான் இருந்துச்சு..’ முதல்ல ராஜா ராணி ஹீரோவ அவரதான்.. ரொம்ப கஷ்டமா போச்சு’ - சஞ்சீவ்
Alya Sanjeev: ஆலியா உடைய அதிர்ஷ்டமா? என்று தெரியவில்லை; என்னுடைய கிராஃப் அப்படியே வேறு லெவலுக்கு சென்று விட்டது. அங்கிருந்து எனக்கு தொடர்ச்சியாக வருமானம் என்பது வந்து கொண்டே இருந்தது.- சஞ்சீவ் எமோஷனல்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ' ராஜா ராணி ' சீரியல் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நடித்த நாயகன் சஞ்சீவும், நாயகி ஆலியா மானசாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் ஆண் குழந்தை பிறந்தது. இவர்கள் இருவரும் இணைந்து அண்மையில் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசினர்.
அதில், சஞ்சீவ் பேசும் போது,‘நான் என்னுடைய வாழ்க்கையை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று ஓரளவுக்கு திட்டமிடுவேன்; ஆனால், அதையும் மீறி அதிர்ஷ்டம் என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கிறது. திரைப்படங்களில் எனக்கு சரியான வாய்ப்புகள் அமையாத போது, நான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக உட்கார்ந்து இருந்தால், இன்னும் நான்கு ஐந்து வருடங்கள் முயற்சி செய்திருப்பேன்.