பென்ஸ் கார் வாங்கிய சீரியல் நடிகை.. வசூலில் சாதித்த மகாராஜா.. நடிகர் பிரபுவுக்கு அறுவை சிகிச்சை - டாப் சினிமா செய்திகள்
பென்ஸ் கார் வாங்கிய சீரியல் நடிகை, வசூலில் சாதித்த மகாராஜா, நடிகர் பிரபுவுக்கு அறுவை சிகிச்சை, பாய்பிரண்டுடன் திருப்பதியில் ஜான்வி கபூர் சாமி தரிசனம் என தமிழில் டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
2025ஆம் ஆண்டு தொடங்கு முதல் வெள்ளிக்கிழமையில் தமிழில் சிறு பட்ஜெட் படங்களான பாயஸ்கோப், எக்ஸ்ட்ரீம், சீசா, லாரா போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே கடந்த மாதம் வெளியான புஷ்பா 2, விடுதலை 2, ஸ்மைல்மேன் போன்ற படங்கள் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவில் இன்றைய டாப் செய்திகள் பற்றி பார்க்கலாம்
நடிகர் பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை
காய்ச்சல் மற்றும் தலைவலி காரணமாக நடிகர் பிரபு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பிரபுவுக்கு மூளையில் உள்ள ரத்த தமனியில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து பிரபுவின் உடல் நிலை சீரான நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
சீனா பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை குவித்த மகாராஜா
தமிழில் சூப்பர் ஹிட்டான மகாராஜா திரைப்படம் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. படம் தற்போது வரை ரூ. 91 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் நிலையில் 2018க்கு பிறகு அதிக வசூலை பெற்ற இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மகாத்மா காந்தி குறித்த சர்ச்சை கருத்தால் பாடகருக்கு நோட்டீஸ்
மகாத்மா காந்தி இந்தியாவுக்கு இல்லை, பாகிஸ்தானுக்கு தான் தேசப்பிதா என்று பாலிவுட் சினிமாவின் பாடகரான அபிஜித் பட்டாச்சார்யா கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என புனேவை சேர்ந்த வழக்கறிஞர் ஆசிம் சரோட் பாடகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளும் முபாசா: தி லயன் கிங்
மிக பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியான ஹாலிவுட் அனிமேஷன் படம் முபாசா: தி லயன் கிங். இதன் தமிழ் பதிப்பில் அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், நாசர், விடிவி கணேஷ், சிங்கம் புலி, ரோபோ ஷங்கர் என தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
இதேபோல் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் அந்த சினிமாக்களின் டாப் நடிகர்கள் குரல் கொடுத்துள்ளனர். ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது வரை படம் உலக அளவில் ரூ. 3, 200 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் இந்தியாவில் மட்டும் ரூ. 150 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாய்பிரண்டுடன் திருப்பதியில் ஜான்வி கபூர் சாமி தரிசனம்
பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் காதலர் என கிசுகிசுக்கப்படுபவர் ஷிகர் பஹாரியா. இவருடன் இணைந்து திருப்பதிக்கு வந்த நடிகை ஜான்வி கபூர் சாமி தரிசனம் செய்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
பல கோடி ரூபாய் நஷ்டத்தில் அட்லி படம்
தமிழில் சூப்பர் ஹிட்டான தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கிறிஸ்துமஸ் ரிலீஸாக டிசம்பர் 25ஆம் தேதி வெளியானது. சுமார் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில் இதுவரை ரூ. 50 கோடி மட்டும் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தை தயாரித்த இயக்குநர் அட்லிக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன
பென்ஸ் கார் வாங்கிய டிவி நடிகை
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஆலியா மானசா, தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். ராஜா ராணி சீரியலில் நடித்தபோது அந்த தொடரில் நாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரை ஸ்டார் ஜோடிகளாக இவர் இருவரும் வலம் வரும் நிலையில், கடந்த மாதம் சொகுசு கப்பல் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது இந்த நட்சத்திர தம்பதி ரூ. 1 கோடி வரை மதிப்பு மிக்க மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளனர். தங்களது புதிய காருடன் நிற்கும் புகைப்படத்தை ஆலியா பகிர்ந்திருந்த நிலையில் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்
பொங்கல் ரிலீஸில் இருந்து ஜகா வாங்கிய படங்கள்
விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வராது என்ற அறிவிப்பு வெளியானவுடன், பல படங்கள் பொங்கல் ரேஸில் இணைந்தன. இதில் பொங்கல் வெளியீட்டை ஷங்கரின் கேம் சேஞ்சர், ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை, விஷ்ணு வர்தன் இயக்கிய நேசிப்பாயா, விஷால் நடிப்பில் பெட்டிக்குள் முடங்கி கிடந்த மதகஜராஜா ஆகிய படங்கள் தங்களது வெளியீட்டை உறுதி செய்துள்ளன.
இதில் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட போதிய திரையங்கு கிடைக்காமல் சண்முக பாண்டியன் நடித்த படைவீரன், சுசீந்திரன் இயக்கிய 2கே லவ் ஸ்டோரி, சிபிராஜ் நடித்த 10 ஹவர்ஸ் ஆகிய படங்கள் விலகியுள்ளன.
ரீ-ரிலீசில் கோடிகளை அள்ளிய தளபதி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - மணிரத்னம் கூட்டணியில் வெளியான கல்ட் கிளாசிக் படமான தளபதி, கடந்த மாதம் 12ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. மறுவெளியீட்டிலும் படம் அரங்கு நிறைந்த ஹவுஸ் புஃல் காட்சிகளாக ஓடிய நிலையில் ரூ. 3 கோடி வரை வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிந்தி வசூலில் புதியதொரு மைல்கல்லை எட்டிய புஷ்பா 2
கடந்த மாதம் 5ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா 2 அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பல்வேறு சாதனைகளை புரிந்தது. இந்த படம் தற்போது ஹிந்தியில் மட்டும் ரூ. 800 கோடி வசூல் என்ற மைல்கல் எட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியில் வெளியான டப்பிங் படம் ஒன்று இத்தனை கோடிகளை வசூலித்திருப்பது புதியதொரு சாதனையாக இருப்பதாக திரையுலகில் பேசப்படுகிறது.