Alya Manasa: அப்பாவுக்கு கேன்சர்.. குரூப் டான்சர் வேலை; கையை கடித்த காசு! - ஆல்யா பட்ட கஷ்டங்கள்!
முடியை சரி செய்து கொள்வேன். ஆடிஷனுக்கு செல்வேன். பல நேரங்களில் அங்கு சென்ற பின்னர், அவர்கள் சொல்லக்கூடிய கேரக்டர் எனக்கு செட் ஆகாதது போல இருக்கும். அப்போது நான் அதை வேண்டாம் என்று மறுத்து வந்து விடுவேன்.
பிரபல நடிகையான ஆல்யா மானசா, சினிமா வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த இரண்டாம் ஆண்டிலேயே, படிப்பை அப்படியே நிறுத்திவிட்டு, சினிமாவில் நடிப்பதற்கான முயற்சியை செய்ய ஆரம்பித்து விட்டேன். அந்த சமயத்தில் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நான் முயற்சி செய்து கொண்டிருந்தேன். தினமும் காலையில் எழுந்திருப்பேன்; மேக்கப் செய்வேன்.
முடியை சரி செய்து கொள்வேன். ஆடிஷனுக்கு செல்வேன். பல நேரங்களில் அங்கு சென்ற பின்னர், அவர்கள் சொல்லக்கூடிய கேரக்டர் எனக்கு செட் ஆகாதது போல இருக்கும். அப்போது நான் அதை வேண்டாம் என்று மறுத்து வந்து விடுவேன்.
சில சமயங்களில் அவர்கள், அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமானவள் இல்லை என்று சொல்லி, அனுப்பி விடுவார்கள். இது கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்து கொண்டிருந்தது.
ஆனால் நான் மீண்டும், மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு பொருளாதார ரீதியாகவும் நெருக்கடி வந்தது.
இதனையடுத்து, ஜிம் ட்ரெய்னராக வேலை பார்ப்பது, குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பது, பாடலில் பின்னணியில் நடனம் ஆடுவது உள்ளிட்ட பல வேலைகளை செய்தேன்.
அதிலிருந்து எனக்கு ஒரு கணிசமான தொகை செலவுக்கு கிடைத்தது. ஆனால் நீண்ட காலம் என்னால் அப்படியே சென்று கொண்டிருக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் எனக்கு சீரியலில் இருந்து வாய்ப்பு வந்தது.
ஆனால் அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு ஒரு சின்ன தயக்கம் இருந்தது. அது, சினிமாவுக்கு முயற்சி செய்து கொண்டிருந்த ஒரு பெண், சீரியலுக்கு வந்தால், அவளை மக்கள் எப்படி பார்ப்பார்கள் என்பது!
அந்த சமயத்தில், என்னுடைய அப்பா வேறு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆகையால், என்னுடைய அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நான் அந்த சீரியல் வாய்ப்பை எடுத்துக் கொண்டேன்.
ஆனால், இப்போது நான் ஒரு விஷயத்தை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறேன். அது என்னவென்றால், நான் சினிமாவில் நடித்திருந்தால் என்னை மக்கள், தீபாவளி, பொங்கல் அல்லது ஏதாவது ஒரு நாளில் தான் பார்க்க முடியும். ஆனால் இப்போது சீரியலில் தினம் தினம் என்னை பார்க்கிறார்கள்” என்று பேசினார்.
முன்னதாக, ராஜா ராணி சீரியலில் நடித்ததின் மூலம் பிரபலமான ஆல்யா, தன்னுடன் நடித்த நடிகரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஆல்யாவும், சஞ்சீவும் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆல்யா, தானும் சஞ்சீவும் சண்டை போட்டுக்கொள்ளும் வீடியோவை பகிர்ந்தார்.
இதன் மூலம் அந்த சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து இவர் கொடுத்த பேட்டிகளில் உள்ள போட்டோக்களை கட் செய்து, அதனை போலி விளம்பரமாக மாற்றி, எம் எல் எம் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்த காரணத்தினாலே தான் இவ்வளவு பெரிய பணக்காரராக ஆனேன் என்று ஆல்யாவே சொன்னது போல அந்த விளம்பரம் உலாவியது.
இதனையடுத்து பலரும் அவருக்கு போன் செய்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா? என்று கேட்டனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆல்யா, இந்த விவகாரம் குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். மேலும் அதில் உண்மை இல்லை என்றும் அது போலி விளம்பரம் என்றும் விளக்கம் அளித்தனர்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்