தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Alya Manasa Has Shared A Video Of A Snake On The Sets Of Sun Tv Iniya Serial

Alya Manasa: அழையா விருந்தாளியாக வந்த பாம்பு.. பதறி அலறிய ஆல்யா.. - வீடியோ இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 25, 2024 12:09 PM IST

ராஜா ராணி சீரியலில் நடித்ததின் மூலம் பிரபலமான ஆல்யா, தன்னுடன் நடித்த நடிகரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆலியா மானசா!
ஆலியா மானசா!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், திடீரென்று இந்த படப்பிடிப்பு தளத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்திருக்கிறது. இதனை ஆல்யா மானசா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

முன்னதாக, ராஜா ராணி சீரியலில் நடித்ததின் மூலம் பிரபலமான ஆல்யா, தன்னுடன் நடித்த நடிகரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஆல்யாவும், சஞ்சீவும் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆல்யா, தானும் சஞ்சீவும் சண்டை போட்டுக்கொள்ளும் வீடியோவை பகிர்ந்தார்.

இதன் மூலம் அந்த சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து இவர் கொடுத்த பேட்டிகளில் உள்ள போட்டோக்களை கட் செய்து, அதனை போலி விளம்பரமாக மாற்றி, எம் எல் எம் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்த காரணத்தினாலே தான் இவ்வளவு பெரிய பணக்காரராக ஆனேன் என்று ஆல்யாவே சொன்னது போல அந்த விளம்பரம் உலாவியது. 

இதனையடுத்து பலரும் அவருக்கு போன் செய்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா? என்று கேட்டனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆல்யா, இந்த விவகாரம் குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். மேலும் அதில் உண்மை இல்லை என்றும் அது போலி விளம்பரம் என்றும் விளக்கம் அளித்தனர். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்